தமிழ்நாடு
காய்கறி கடைகளுக்கு தடை, டாஸ்மாக் கடைகளுக்கு தடையில்லையா? பொதுமக்கள் ஆவேசம்


தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நேற்று அதிரடியாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும், திருமணத்திற்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதி என்றும், இறுதி நிகழ்ச்சிக்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் ஆட்டோக்களில் இரண்டு பயணிகளும் கார்களில் மூன்று பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கறி வணிகத்திற்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மொத்த காய்கறி சந்தை மட்டும்தான் கோயம்பேட்டில் இயங்க வேண்டும் என்றும் சில்லரை காய்கறி கடைகள் இயங்கக் கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த உத்தரவு காரணமாக காய்கறி வாங்குவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்றும் சில்லரை வியாபாரிகளுக்கும் கட்டுப்பாடுகள் வழங்கி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு
இனி டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை டவுன்லோடு செய்யலாம்: தேர்வாணையம் அறிவிப்பு


இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முடிவுகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தேவைப்படுவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி தங்களுடைய விடைத்தாள் நகலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வுகள் தங்களுடைய விடைத்தாள்களை டவுன்லோட் செய்து தாங்கள் எந்த இடத்தில் தவறு செய்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதும் தங்களது உண்மையான மதிப்பெண் இது தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு
2 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தால் மாரடைப்புக்கு வாய்ப்பு: ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை


இரண்டு மணி நேரம் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை செய்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.சமீபத்தில் மருத்துவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் வந்த நோயாளி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவருக்கு வெறும் 29 வயது மட்டும்தான் என்றும் அவருக்கு தான் சிகிச்சை அளித்ததாக கூறி உள்ளார்.
மேலும் அவருக்கு சிகரெட் மது உட்பட எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றும் சுகர் பிரஸர் உள்பட எந்த நோயும் இல்லை என்றும் ஆனால் எப்படி மாரடைப்பு வந்தது என்று தாங்கள் ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறினார். இதனை அடுத்து அவரது பணி குறித்து அவரிடம் விசாரித்த போது அவர் ஒரே இடத்தில் சுமார் 10 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார் என்பது தெரிய வந்ததாகவும், ஐடி துறையில் அவர் பணிபுரிகிறார் என்றும் தெரியவந்தது என்றும் கூறினார்.
"ஒரே இடத்தில் அமர்ந்து நெடுநேரம் பணி செய்வோர் கவனத்திற்கு.!"
"முக்கியமாக IT பணியாளர்கள் மேலான கவனத்திற்கு.!"#Caution #எச்சரிக்கை
Cc: @Vanisre25257710 pls make a note.! pic.twitter.com/umjuW5SJXn
— விஷ்வா I Viswa I (@ChennaiViswa) April 20, 2021
தமிழ்நாடு
11 ஆயிரத்தை மீண்டும் நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்று தமிழகத்தில் சுமார் 11,000 பேர்களும் சென்னையில் சுமார் நான்காயிரம் பேர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,986
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,13,378
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,711
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 48
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13205
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 6250
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 920,369
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 99,246
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 210,56,094
-
தமிழ்நாடு2 days ago
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் பழனிசாமி!
-
சினிமா செய்திகள்1 day ago
எனக்கு அவரை தவிர யாருமே இல்லை: விவேக் மேனேஜரின் உருக்கமான பதிவு
-
சினிமா செய்திகள்1 day ago
தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுதாக்கல்
-
கிரிக்கெட்2 days ago
ஷிகர் தவான் அபார ஆட்டம்: டெல்லி அணி சூப்பர் வெற்றி