தமிழ்நாடு
தேர்தல் அறிக்கையே வெளியிடாமல் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி


தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன என்பதும் அந்த தேர்தல் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையே இல்லாமல் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்ட கொண்டே வந்தது.
தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் 234 தொகுதிகளிலும் வெறும் வாயால் கூறும் வாக்குறுதிகளை மட்டுமே நம்பி போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து, ஆறு தொகுதிகளில் நிற்கும் சின்ன சின்ன கட்சிகள் கூட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் நிற்கும் ஒரு கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடாமல் இருப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு
குவார்ட்டர் பாட்டிலில் குட்டி பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்!


டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் குட்டி பாம்பு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ற பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சமீபத்தில் டாஸ்மாக் கடையில் குவாட்டர் பாட்டில் ஒன்று வாங்கி வாங்கினார். பாதியை குடித்துவிட்டு மீதியை பிறகு குடிக்கலாம் என்று வைத்து இருந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அந்த மது பாட்டிலை பார்த்தபோது மதுபாட்டில் உள்ளே ஒரு குட்டி பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் சுரேஷிடம் கூறியதை அடுத்து அவர் அதிர்ச்சியில் மயக்கமடைந்து விழுந்து விட்டார். இதனை அடுத்து சுரேஷ் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள குடிமகன்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய் விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும் 40 வயதானவர்களும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி சென்று விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிவருகிறது என்பதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அறிவுரையை அடுத்து தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்துக்கு இன்று பதிலளித்த தமிழக அரசு அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் வரும் மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை அடுத்து அரியர் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண அழைப்பித இணையத்தில் வைரல்!