தமிழ்நாடு
ட்யூனில் பின்னிப் பெடலெடுத்த ‘மோடி சாங்’- பாஜக வெளியிட்ட வீடியோவ பாத்துட்டீங்களா?


பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி வந்துள்ளார். அங்கு அவர் பாஜக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து அவர் கோயம்புத்தூர் வந்து, தமிழ தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். இதையொட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்ட ‘வாங்க மோடி, வணக்கங்க மோடி’ கவனம் ஈர்த்து வருகிறது.
‘மோடி பாடல்’ வீடியோ இதோ:
வாங்க மோடி …
வணக்கங்க மோடி …#TNWelcomesModi pic.twitter.com/D7fH4pmxzb— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 25, 2021
புதுச்சேரியில் பேசிய மோடி, ‘புதுவை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.2,426 கோடி மதிப்பிலான விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும். புதுச்சேரியில் தற்போது சாலை, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் கடல் சார் வணிகங்களுக்காக பல்வேறு திட்டங்களைத் துவக்கி உள்ளோம். இதன் மூலம் மிகப் பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இல்லாத காரணத்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கிறேன். புதுச்சேரிக்கு ஒரு நல்ல அரசாங்கம் தேவையானது. அடுத்து புதுச்சேரியில் உருவாகப் போகும் அரசு, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்’ என்று பேசினார்.
தமிழ்நாடு
காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்: பேருந்துகளில் அளவுக்கு மீறி கூட்டம்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சமீபத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு விதிகளில் ஒன்று பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, மாஸ்க் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த விதிமுறைகள் உள்பட பல விதிமுறைகளை பொதுமக்கள் காற்றில் பறக்க விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி பேருந்துகளில் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து சென்னை பேருந்துகளிலும் பல பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்து வருகின்றனர்
இதுபோல் அரசு விதித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மக்களும் அரசு ஊழியர்களும் காற்றில் பறக்க விட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் மேலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாதம்!


ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா? என மக்களிடம் கருத்து கேட்டு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் ஆக்சிஜனுக்காக திறக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை அதன்பிறகு தாமிர உற்பத்திக்கும் வழி வகுத்து விடும் என்றும் அந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்றும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 13 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் அதிகம்!


தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கு சற்றே குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 4 ஆயிரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12,652
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,37,711
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,789
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 59
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,317
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 7,526
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 934,966
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 113,144
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 212,79,542
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
சினிமா செய்திகள்2 days ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்