தமிழ்நாடு
‘நான் சொன்ன பிறகே பொள்ளாச்சி விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ – கமல் அடம்


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாம் சொன்ன பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சீரமைப்போம் தமிழ்நாட்டை என்ற பெயரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பொள்ளாச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் பற்றி தாம் நினைவுபடுத்திய பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேசினார்.
https://twitter.com/ikamalhaasan/status/1349203005594169345?s=20
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமது பிரச்சாரத்திற்காக நட்டப்பட்ட விளம்பர பதாகைகளை அமைச்சர் பெருமக்களும், மாநகராட்சி ஊழியர்களும் அகற்றி வருவதாக குற்றம் சாட்டடினார். மேலும், அவ்வாறு விளம்பர பதாகைகளை அகற்றியதால் மக்கள் நீதி மய்யத்திற்கு கூடுதல் விளம்பரம் கிடைத்தாகவும் வஞ்சக சிரிப்புடன் கூறினார்.
முன்னதாக கொட்டும் மழையிலும் குடைக்குள் இருந்த கமல்ஹாசனை, மழையில் நனைந்தபடி மக்கள் வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/maiamofficial/status/1349188984673501186?s=20
தமிழ்நாடு
‘ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை… பரிசீலிக்கும் தமிழக அரசு!


ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தர தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சில கொரோனா கட்டுப்பாடுகள் உடன் இந்த ஆண்டும் மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று மதுரை அவனியாபுரத்திலும் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளன. நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டுகள் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு நேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்” என்றார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வழக்கமாக வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு வழக்கமாக வீட்டு உபயோகப் பொருட்கள், கார், பைக், சைக்கிள், கட்டில், குத்துவிளக்கு, தங்கக்காசு என வழங்கப்படுவது வழக்கம். நீண்ட காலமாகவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
மரப்பலகையில் பொங்கல் அடுப்பு! ஸ்டாலினுக்குப் போட்டியாக உதயநிதியின் பலே ஐடியா!!


திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மரப்பலகை மீது பொங்கல் அடுப்பு வைத்து போஸ் கொடுத்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றார். அப்போது அடுப்பே பற்ற வைக்காமல், பொங்கல் பானைக்குள் கரண்டி விட்டு கிண்டுவது போல் போஸ் கொடுத்தார். அந்த போட்டோ வைரலாக பரவியது.
இந்த நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் மரப்பலகையில் பொங்கலிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு மரப்பலகை (பிளைவுட்) மீது செங்கல் அடுப்பு வைத்து, அதன் மீது பொங்கல் அடுப்பு வைக்கப்பட்டுள்ளது. சமத்துவ பொங்கலை கொண்டாடுவதாக நினைத்து உதயநிதி ஸ்டாலினும் போஸ் கொடுத்துள்ளார்.
மரப்பலகை மீது அடுப்பு வைத்தால் மரப்பலகை எரிந்து விடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பொங்கல் அடுப்பு வைத்துள்ளார். அதற்கு உதயநிதி ஸ்டாலினும் போஸ் கொடுத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பாஜக சார்பில் நடத்திய சமத்துவ பொங்கலில் ஒரேயொரு பானையில் மட்டும் பொங்கல் வைத்து, மற்ற பானைகளில் பஞ்சு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
வெறும் 90 ரூபாய்க்கு இனி புதுப்படங்கள் அனைத்தையும் பார்க்கலாம்!


அமேசான் நிறுவனம் வெறும் 89 ரூபாய்க்கு, அமேசான் பிரைம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய திரைப்படங்களும், பிடித்தமான திரைப்படங்களும் குறைந்த விலையில் கண்டுகளிக்கலாம்.
தற்போது புதிய திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் நெட்பிலிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட தளங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், நெட்பிலிக்ஸ்க்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் புதியதொரு சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மாதம் 89 ரூபாய் ரீசார்ஜ்க்கு, மொபைலில் அமேசான் பிரைமை கண்டுகளிக்கலாம். ஒரு மொபைலில் மட்டும் தான் இதனைப் பயன்படுத்த முடியும்.
மேலும், ஒரு மாதத்திற்கு இலவச பயன்பாட்டுக் காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் ஒரு மாதத்திற்கு மட்டும் இலவசமாக அமேசான் பிரைமை அணுகி விருப்பமான திரைப்படங்களைப் பார்க்கலாம்.
ஒரு மாதத்திற்குப் பிறகு 89 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து தொடர்ந்து அமேசான் மொபைல் பிரைமைப் பயன்படுத்தலாம். அத்துடன் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகளை அமேசான் வழங்குகிறது.