தமிழ்நாடு
தேர்தல் முடிவுக்காக காத்திருக்காதீங்க… ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே…- மு.க.ஸ்டாலின்


கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், தமிழக மக்களுக்குச் சேவை செய்ய திமுக தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
‘தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.கழகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு – மருத்துவ உதவி – அத்தியாவசியத் தேவைகளை தி.மு.கழகம் நிறைவேற்றியது.
கழக உடன்பிறப்புகளான அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்றுத் தொண்டாற்றினர்.
இந்த கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்.
தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட ‘ஒன்றிணைவோம் வா’ருங்கள் உடன்பிறப்புகளே’ என ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முழு விவரம் பின்வருமாறு:
தமிழ்நாடு
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? சீமான் விளக்கம்


நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் உள்பட பலரும் விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
மேலும் ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்து இருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு
வேலூர் பட்டாசு கடையில் பயங்கர விபத்து: 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி


தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் உயிர் பலியும் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரில் பட்டாசு கடை உரிமையாளர் ஒருவர் என்பதும், அவரது இரண்டு பேரக்குழந்தைகள் என்பதும் மூவரும் பட்டாசு வெடி விபத்தில் ஏற்பட்ட தீயினால் உடல் கருகி உயிரிழந்தனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!
-
கிரிக்கெட்2 days ago
விக்கெட் எடுத்தவுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய பிராவோ! வைரல் வீடியோ