தமிழ்நாடு
“பன்னீர்செல்வத்தை கம்பி எண்ண வைக்கிறது உறுதி!”- தேனியில் சவால்விட்ட மு.க.ஸ்டாலின்


திமுக ஆட்சி அமைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்படுவது உறுதி என்று தேனியில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் சவால் விட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-
2001-ம் ஆண்டு, பன்னீர்செல்வம் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல் அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் எனப் பதவி வகித்த ஐந்து வருடங்களில் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இன்றைக்கு பன்னீரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது.


இதை விசாரிக்க வலியுறுத்தித்தான், தி.மு.க சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பது அவர்கள் ஆட்சி. லஞ்ச ஒழிப்புத்துறை அ.தி.மு.க அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. எனவே, பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். அது நமது அரசு அமைந்தவுடன் நிச்சயமாக நடந்தே தீரும்.
அமெரிக்க நிறுவனமே இவருக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட விவகாரத்தை நாங்கள், ஆளுநரிடம் புகார் மனுவாகக் கொடுத்துள்ளோம்! இந்த ஊழல் முகத்தை மறைப்பதற்காகத் தான் பரதன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பன்னீர்செல்வம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
அதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு!


நாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? இடம்பெறாதா? என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியபோது தேமுதிக கேட்ட தொகுதிகளில் இருந்து பாதிக்கும் குறைவாகவே அதிமுக தருவதாக கூறியது. அதுமட்டுமின்றி தேமுதிகவின் கோரிக்கையான ராஜ்யசபா தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத நிலையில் தேமுதிக இவ்வாறு பேசியிருப்பது அந்த கட்சியின் அழிவை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு
4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்?


தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும் படை சோதனையிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இந்த பறக்கும் படையினர் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழி குஞ்சுகளை இலவசமாக அதிமுகவினர் வழங்கி வருவதாகவும் இதனை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.
இந்த தகவல் தேர்தல் பறக்கும் படையினர்களுக்கும் வந்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற பறக்கும் படையினர் அதிமுகவினர் வைத்திருந்த 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோழிக்குஞ்சுகளை கொடுத்து வாக்கு கேட்கும் நிலைக்கு வந்து விட்டதே என்ற வருத்தம் தான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு
தேமுதிக, விசிக நிலைமை என்ன? அதிர்ச்சி தகவல்!


சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் மற்றும் மனிதநேய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் அதிமுக கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளுமே அந்த கூட்டணியில் தங்கள் நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே கூட்டணி, இல்லை என்றால் வெளியேறலாம் என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.
இதனால் தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
-
இந்தியா1 day ago
தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!
-
தமிழ்நாடு1 day ago
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?
-
இந்தியா1 day ago
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?
-
இந்தியா2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!