Connect with us

தமிழ்நாடு

சட்ட விரோத தொழில்; உச்ச கட்டத்தில் உளறும் தினகரன்: விளாசிய ராஜேந்திர பாலாஜி!

Published

on

அமமுகவை சேர்ந்தவர்கள் யாரும் எந்த காரணத்துக்காகவும் ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தினகரன், எத்தனையோ பேர் ஆளும்கட்சி காரர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் செல்வதும், அமைச்சர்களுடன் சுமூகமாக உறவு வைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.

நமக்கு எப்படி திமுக எதிரியோ, அப்படி இந்த துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும். அமைச்சர் பத்திரிகை கொடுத்ததால் சென்றோம் என காரணம் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நேற்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், திமுகதான் எங்களுக்கு போட்டியே தவிர அமமுக எங்களுக்கு போட்டி இல்லை. மக்களவைத் தேர்தலுடன் அமமுக கதை முடிந்துவிட்டது. சட்டத்திற்கு விரோதமான தொழில் செய்பவர்கள்தான் அமமுகவுடன் உள்ளனர். தோல்வியின் உச்ச கட்டத்தில் உளறிக்கொண்டிருக்கிறார் தினகரன். விரக்தியின் வெளிப்பாடுதான் அவருடைய பேச்சு என்று விளாசினார்.

தமிழ்நாடு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது!

Published

on

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது.

கொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெறவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே தேர்வு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் கிடைக்கும்.

Continue Reading

தமிழ்நாடு

ஆடுகளைத் திருடி ஆட்டின் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்ற 2 பேர் கைது!

Published

on

திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஆடு வளர்த்து விற்று வருபவரான இவரது ஆடுகளை நான்கு பேர் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர்.

திருடிய ஆட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் விற்க முயன்றுள்ளனர். அப்போது ஆட்டின் உரிமையாளர் என்று தெரியாமல் கந்தசாமியடமே விலை பேசியுள்ளனர்.

ஆடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தசாமி, தனது ஆட்டை திருடியது மட்டுமல்லாமல் தன்னிடமே விலைபேசி விற்க முயன்றனர் என்று காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதை அடுத்து ஆடு விற்பனை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்ற காவல் துறையினர், இருவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். திருடப்பட்ட ஆடுகள் கந்தாசாமியிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Continue Reading

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க முடிவு!

Published

on

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் பொது, கார்டை ஸ்கான் செய்தால் மட்டும் போதும் என்பதால் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

மேலும் விரைவில் நாடு முழுவதும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருகிறது. அப்போது ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரேஷன் கார்டை ஸ்கான் செய்த பிறகு அட்டைக்கு சொந்தமான ஒருவரின் கைரேகை வைத்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற முறை அறிமுகம் தமிழகத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகத் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படும்.

ரேஷன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டால், ரேஷன் கார்டுகளை அடகு வைக்கும் முறையும் குறையும் என்று கூறப்படுகிறது.

Continue Reading




வேலை வாய்ப்பு23 hours ago

மத்திய பாதுகாப்புப் படையில் வேலை!

வேலை வாய்ப்பு24 hours ago

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை!மொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/08/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/08/2020)

வீடியோ செய்திகள்2 days ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (12/08/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/08/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/08/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/08/2020)

சினிமா செய்திகள்4 days ago

அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா12 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு12 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்2 days ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 weeks ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்5 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்5 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்5 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்5 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

Trending

%d bloggers like this: