Connect with us

தமிழ்நாடு

ஒரு ரூபாய்க்கு மாஸ்க், 10 ரூபாய்க்கு சானிடைசர்: புதுச்சேரி அரசு விற்பனை!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனாவை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கடைகளில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் மற்றும் பத்து ரூபாய்க்கு சானிடைசர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனையை தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

புதுவையில் உள்ள மக்களில் 64 பேர் இன்னும் சரியாக படவில்லை என்றும் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் போட வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் வாய் அல்லது மூக்கு வழியாக உடலினுள் செல்லும் என்றும் அதேபோல் உடம்பில் இருந்து வாய், மூக்கு வழியாக தான் வெளியேறி மற்றவர்களுக்கு பரவும் என்றும், எனவே மாஸ்க் அணிந்து கொண்டால் கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்தி விடலாம் என்றும் எனவே தயவு செய்து அனைவரும் அணியுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒரு ரூபாய்க்கு மாஸ்க் கிடைக்கிறது என்பதால் புதுவையில் உள்ள அனைவரும் அந்த மாஸ்க்கை வாங்கி அணிய தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல் தமிழகத்திலும் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

தமிழ்நாடு

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பேதமின்றி மக்களுக்காக செயல்படுவோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Published

on

By

தமிழக முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் சட்டசபை கூட்டம் தொடங்கிய உடன் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பதவிப்பிரமாணம் நிகழ்ச்சி முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கொரோனா பேரிடரில் இருந்து தமிழ் நாட்டை மீட்க ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதங்கள் கடந்து ,மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நோய் தடுப்பிற்காக எம்எல்ஏக்கள் அரசினை நாடினால் உடனடியாக உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட இணைந்து நிற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

 

 

Continue Reading

தமிழ்நாடு

நான் எழுதியுள்ள நூல்களை யாரும் வாங்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

Published

on

By

நான் தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கும் வரை நான் எழுதிய நூலை யாரும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் எனக்கே என்னுடைய நூல்களை பரிசு அளிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நான்‌ பணி நேரம்‌ முடிந்த பின்பும்‌, விடுமுறை நாட்களிலும்‌ எனக்குத்‌ தெரிந்த தகவல்களை வைத்தும்‌, என்‌ அனுபவங்களைத்‌ தொடுத்தும்‌ சில நூல்களை எழுதி வந்தேன்‌. அவற்றில்‌ உள்ள பொருண்மை, கடற்கரையில்‌ கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக்‌ கருதி சேகரிக்கும்‌ சிறுவனின்‌ உற்சாகத்துடன்‌ எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின்‌ காரணமாக பள்ளிக்‌ கல்வித்துறைக்கு நான்‌ ஒரு மடல்‌ எழுதியுள்ளேன்‌. நான்‌ எழுதியுள்ள நூல்களை எக்காரணம்‌ கொண்டும்‌ எந்த அழுத்தம்‌ வரப்பெற்றாலும்‌, தலைமைச்‌ செயலராகப்‌ பணியாற்றும்‌ வரை எந்தத்‌ திட்டத்தின்‌ கீழும்‌ வாங்கக்‌ கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என்‌ பணியின்‌ காரணமாக அது. திணிக்கப்பட்டிருப்பதாகத்‌ தோன்றி களங்கம்‌ விளைவிக்கும்‌ என்பதால்தான்‌ இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன்‌. எந்த வகையிலும்‌, என்‌ பெயரோ, பதவியோ தவறாகப்‌ பயன்படுத்தப்படக்‌ கூடாது என்பதே நோக்கம்‌.

அரசு விழாக்களில்‌ பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள்‌ வழங்கினால்‌ நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம்‌ ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில்‌ அரசு அலுவலர்கள்‌ யாரும்‌ என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில்‌ விநியோகிக்க வேண்டாம்‌ என்று அன்புடன்‌ விண்ணப்பம்‌ வைக்கிறேன்‌. இவ்வேண்டுகோள்‌ மீறப்பட்டால்‌ அரசு செலவாக இருந்தால்‌ தொடர்புடைய அதிகாரியிடம்‌ அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில்‌ செலுத்தப்படும்‌. சொந்த செலவு செய்வதையும்‌ தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்படுத்த வேண்டாம்‌ என அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

இவ்வாறு இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

தமிழ்நாடு

‘புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி..!’- குற்றச்சாட்டுகளை அடுக்கிய திருமா

Published

on

By

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக, இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தனிப்பட்ட முறையில் ஆட்சியமைக்கு சதி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட நபர்களைத் தேர்தலில் நிறுத்தி 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராகப் பரவியேற்றிருக்கிறார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ யாரும் இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு அங்கமாக பாஜகவை சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட்சியென்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

புதுவையில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக் கொள்ள வேண்டுமென்றும்; தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டுகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

Continue Reading
வேலைவாய்ப்பு11 mins ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா44 mins ago

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்க 10 நிறுவனங்கள் தயாரா இருக்கு… ஆனா மோடி அரசு அனுமதிக்கல்ல’

தமிழ்நாடு1 hour ago

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பேதமின்றி மக்களுக்காக செயல்படுவோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

வேலைவாய்ப்பு2 hours ago

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு2 hours ago

நான் எழுதியுள்ள நூல்களை யாரும் வாங்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

தமிழ்நாடு2 hours ago

‘புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி..!’- குற்றச்சாட்டுகளை அடுக்கிய திருமா

உலகம்2 hours ago

இனிமேல் செய்தியை படிக்காமல் பகிர முடியாது: ஃபேஸ்புக்கில் புதிய வசதி!

தமிழ்நாடு3 hours ago

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

சினிமா செய்திகள்3 hours ago

இன்று முதல் ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாரா திரைப்படம்!

தமிழ்நாடு3 hours ago

‘தமிழக அரசே… மக்கள் சுமையைக் குறைக்க இதை செய்யுங்க…’- சீமான் வலியுறுத்தல்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending