தமிழ்நாடு
இந்து கடவுளுடன் சிலுவை வைத்திருந்த சர்ச்சை: பதிலடி கொடுத்த மாதவன்!


நேற்று முன்தினம் சுதந்திர தினம், ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டத்தை தனது வீட்டில் கொண்டாடிய பிரபல நடிகர் மாதவன், அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
மாதவன் பகிர்ந்த அந்த புகைப்படத்தில் மாதவனின் வீட்டில் இந்துக் கடவுகள்களுடன் கிறிஸ்தவர்களின் சிலுவையும் இடம்பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது. சிலர் மாதவை வசைபாட ஆரம்பித்தனர். அதில் ஒருவர் தனது டுவிட்டரில், பின்னணியில் ஏன் இந்து கடவுள்களுடன் சிலுவை இருக்கிறது. அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம் விமர்சித்தார்.
இந்த டுவீட்டுக்கு பதில் அளித்த மாதவன், உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அந்த புகைப்படத்தில் உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது. அதுமட்டுமல்ல தர்காவிற்கும் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுவருவேன். நான் சிறுவயதிலிருந்தே எனது அடையாளத்தை பெருமையாகவும் அதே நேரத்தில் மற்ற மதங்கள் மேல் மரியாதை செலுத்தும்விதமாகவும் வளர்க்கப்பட்டுள்ளேன். எனக்கு எம்மதமும் சம்மதம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
உடைகிறது அதிமுக கூட்டணி… ‘தனித்துப் போட்டியிட தயார்!’- அறிவித்த தேமுதிக


தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் இணக்கமான போக்கு இல்லை எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் பாஜக மட்டும் தான், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. மற்ற எந்தக் கட்சிகளும் இதுவரை கூட்டணி தொடர்வது குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இன்னும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி சுக்குநூறாக உடையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக எந்தக் கட்சியும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை, தங்களின் முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை. இதனால் பிரச்சனை மேலும் பூதாகரமாகி உள்ளது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘நாம வரப் போற தேர்தல்ல கூட்டணியில போட்டியிடவும் வாய்ப்பிருக்கு. தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பிருக்கு. எதுவா இருந்தாலும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். கேப்டன் மாதிரி ஆட்கள் நம்ப நாட்டுல தோத்துறக் கூடாது’ என்று அதிரடியாக பேசியுள்ளார். இதைச் சுட்டிக்காட்டி, கூட்டணி முறிவு குறித்து தான் விஜய பிரபாகரன் மறைமுகமாக பேசியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக சசிகலா விடுதலை குறித்துப் பேசியிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ‘சசிகலாவின் பங்கும் தமிழக அரசியலில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணாக அவர் பூரண நலம் பெற்று தமிழக அரசியலில் தாக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று சூசகமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு
ஒரே நாளில் வேதா இல்லம், ஜெயலலிதாவின் முழு உருவ சிலையைத் திறந்து வைத்த எடப்பாடியார்; ஜெ., பிறந்தநாள் குறித்தும் முக்கிய அறிவிப்பு


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் தோட்ட வேதா இல்லத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இது ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக இருக்கும் என்றும், பொது மக்களின் பார்வைக்கு அந்த இல்லம் திறந்து வைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘சென்னை, போயஸ் தோட்டத்திலுள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட “வேதா நிலையம்” நினைவு இல்லத்தை இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினேன்’ என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
சென்னை, போயஸ் தோட்டத்திலுள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட “வேதா நிலையம்” நினைவு இல்லத்தை இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/0IjekpenKx
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 28, 2021
அதேபோல, சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் 9 அடி முழு உருவ ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பழனிசாமி.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் 9 அடி முழு உருவ புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சிலையை மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/nNZMCX9xuW
— AIADMK (@AIADMKOfficial) January 28, 2021
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜெயலலிதா சம்பந்தமான பல்வேறு விஷயங்களைத் திறந்து வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
தமிழ்நாடு
‘ஒருத்தணும் அலகும் குத்தல, வேலும் குத்தல’- தைப்பூசத்துக்கு காவடி எடுத்த பாஜக தலைவர்கள்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்


இன்று உலகெங்கும் இருக்கும் முருகன் கோயில்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர்கள் பழனியில் காவடி ஏந்தி சென்றுள்ளது விமர்சனத்துக்கு உள்ளானது.
சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் முருகனை வழிபடுவது மற்றும் வேல்களை தங்கள் கட்சி மேடைகளில் தூக்கிப் பிடிப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சில நாட்களுக்கு முன்னர் திருத்தணியில் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது முருகனின் ஆயுதமாக இருக்கும் வேல் ஒன்றை அவரிடம் திமுகவினர் கொடுத்தனர். அதை உயர்த்திப் பிடித்தார் ஸ்டாலின். பொதுவாக மதம் சார்ந்த விஷயங்களில் இருந்து விலகியிருக்கும் ஸ்டாலின், வேலை உயர்த்திப் பிடித்தது தமிழக அரசியல் தளத்தில் விவாதப் பொருளானது. அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதைப் போலவே சில மாதங்களுக்கு முன்னர் முருகனின் அறுபடை வீடுகளை முதன்மைப்படுத்தி, அரசியல் ரீதியான ‘வேல் யாத்திரையை’ நடத்தியது தமிழக பாஜக. அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் நேற்று பழநி மலையில் உள்ள முருகன் கோயிலுக்கு, காவடி ஏந்திச் சென்றுள்ளனர் தமிழக பாஜக தலைவர்கள். குறிப்பாக தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் இந்த காவடி ஏந்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
On the occasion of Thai Poosam, an important occasion for Lord. Muruga, we trekked up the Palani hill to take the blessings of our Lord Bala Thandayuthapani along with our Kavadi.
We took his blessing for the betterment of Tamil people & our country.
Veeravel Vetrivel! pic.twitter.com/uUnOMdO2F7
— K.Annamalai (@annamalai_k) January 27, 2021
பொதுவாக முருக பக்தர்கள், காவடி எடுத்தால், முதுகில் அலகு குத்தி, நாக்கில் வேல் குத்தி, வெறும் உடம்பில் பாதை யாத்திரை செல்வார்கள். இப்படி எதையும் செய்யாமல் வெறுமனே காவடியை மட்டும் ஏந்திக் கொண்டு பாஜகவின் சென்றது சர்ச்சைக்கு உள்ளானது. அதேபோல பாஜகவின் முக்கியப் பொறுப்பாளர்களான கே.டி.ராகவன், எச்.ராஜா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததும் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பாஜகவை விமர்சித்த சில பதிவுகள் இதோ:
ஒருத்தனும் அலகு குத்தல.. கவனிச்சீங்களா..
ராகவன், காயத்ரி, அந்த எச்ச எவனாச்சும் அலகு குத்திட்டு வாங்கடா..
நோகாம நோன்பு கும்பிடுற வேலைய மட்டும் தான் செய்றானுங்க..
— MITHRAN (@mithran148) January 28, 2021
இதுதான் வித்தியாசம்
சட்டையே இல்லாம வரும் இவர்கள் எங்கே
பொய்யா காவடி தூக்கும் பாஜக எங்கே pic.twitter.com/X6LrIUQcV6— ஜெகதீஷ்.கோ (@Jaisajoints) January 28, 2021