தமிழ்நாடு
தண்டால் எடுத்து வைரலான ராகுல்: பொறுக்க முடியாமல் பொங்கிய குஷ்பு!


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ராகுல் காந்தி. இன்னும் ஒரே மாதத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் ராகுல், தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வழக்கமாக மேடை போட்டுப் பொதுக் கூட்டங்களில் பேசும் பிரச்சார யுக்தியிலிருந்து விலகி ராகுல், பல வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் ராகுல் காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜூடோ, நடனம், தண்டால் என உற்சாகமாகப் பங்கேற்றார்.
மாணவிகள் சிலரை மேடைக்கு அழைத்த ராகுல் காந்தி, அவர்களுடன் கைகோர்த்து சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். அதைத்தொடர்ந்து தன்னுடன் தண்டால் எடுக்க யாராவது தயாரா? என ராகுல் கேட்டதும், மாணவி ஒருவர் மேடைக்கு வந்தார். அவருடன் போட்டி போட்டு ராகுல் காந்தி தண்டால் எடுத்தார். பின்னர் ஒரு கையாலும் தன்னால் தண்டால் எடுக்கத் தெரியும் எனக் கூறியவாறு அவர் தண்டால் எடுத்தார். இதுதொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் இந்த செயல்கள் எல்லாம் நல்ல தலைமைக்கு அழகா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை குஷ்பு விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரு தலைவர் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதைத்தான் சொல்ல வேண்டும். மீனவர்களுடன் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பதோ, 10-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வதோ ஒரு தலைவருக்கு நல்லதில்லை.
ஒரு தலைவராக நீங்கள் என்ன மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற்றால் இப்படித்தான் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வீர்களா, தண்டால் எடுப்பீர்களா இல்லை மீனவர்களோடு சேர்ந்து தண்ணீரில் குதிப்பீர்களா?
நீங்கள் என்ன நலத் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லுங்கள். அதுதான் ஒரு தலைவருக்கு அழகு” என்று குஷ்பு தெரிவித்தார்.
தமிழ்நாடு
‘ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்’- மோடியை வறுத்தெடுத்த கமல்


கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்.
பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.
பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ, உடல்நிலையைப் பற்றியோ வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. குறைந்த பட்சம் ரத்த அழுத்தம் கூட பார்க்கப்படுவதில்லை. ஊசி போட்டப் பின் போனில் அழைத்துக் கூட உடல்நலம் குறித்து விசாரிக்கப்படுவதில்லை. முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை என்கிறார்கள்.
தடுப்பூசிகள் எடுத்துக் கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது.
உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் 12.10 சதவீதம் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பற்பல விதிமுறைகளை விதிப்பவர்கள் டாஸ்மாக் கடைகளென்று வந்துவிட்டால் கரிசனத்துடன் அணுகவதும் ஏற்புடையதல்ல. தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கி கிடக்கிறதோ தமிழக அரசு எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் ட்வீட்டுகிறார். மாநிலங்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாமல், எங்களிடம் வந்து மருந்து கேட்டால் எப்படி என்கிறார் இன்னொரு அமைச்சர். முன் நின்று நாட்டைக் காக்க வேண்டிய பிரதமரோ தேர்தல் பிரச்சாரம் செய்து ஓய்ந்த இடைவேளையில் ‘ஊசி போடும் திருவிழா’, ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என விதம் விதமான ஃபேன்ஸி பெயர்களைச் சூட்டிக் கொண்டிருக்கிறார்.
மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழுச் சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தர முடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்டு முன்னகர வேண்டும்.
மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒத்திசைவுடன் தெளிவான திட்டிமடலுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. அரசின் ஒவ்வொரு அலகும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்பதுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்பத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்ப்பாக வேண்டும். ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்’ என அறிக்கை வாயிலாக கமல் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
ஒரு ரூபாய்க்கு மாஸ்க், 10 ரூபாய்க்கு சானிடைசர்: புதுச்சேரி அரசு விற்பனை!


தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனாவை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கடைகளில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் மற்றும் பத்து ரூபாய்க்கு சானிடைசர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனையை தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஒரு ரூபாய்க்கு மாஸ்க் கிடைக்கிறது என்பதால் புதுவையில் உள்ள அனைவரும் அந்த மாஸ்க்கை வாங்கி அணிய தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல் தமிழகத்திலும் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாடு
கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சை பேட்டி: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் தள்ளுபடி- கைதா?


நடிகர் விவேக், சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதற்கு அடுத்த நாளே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், அடுத்த நாள் யாரும் எதிர்பாராத விதமாக காலமானார். தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது இச்சம்பவம். விவேக்கின் மரணத்திற்குத் தடுப்பூசி தான் காரணமா என்கிற கேள்விகளும் அப்போது எழுந்தன. அதற்கு விவேக்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைத் தரப்பு, ‘தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் விவேக்கின் மரணத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறியது.
விவேக் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் மன்சூர், ‘யார் கேட்டார்கள் தடுப்பூசியை. இவர்களே வலுக்காட்டாயப்படுத்தி விவேக்கிற்கு தடுப்பூசியைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் தான் தற்போது அவர் சுயநினைவு இல்லாமல் துவண்டு கிடக்கிறார். தடுப்பூசியில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பது பற்றி இதுவரை எந்த வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது மக்களை தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். கொரோனா என்பது பொய்யான ஒரு விஷயம். நாட்டில் சோதனைகள் என்பது செய்யப்படவில்லை என்றால் கொரோனா என்பது இருப்பதே தெரியாமல் மறைந்துவிடும்.
யாரும் முகக் கவசம் போடக் கூடாது. அப்படிப் போடுவதால் நம் காற்றை நாமே சுவாசிக்கும் படியான தவறான விஷயம் நடக்கிறது. எனவே மக்கள் கொரோனா, தடுப்பூசி என்னும் மாயைகளில் இருந்து வெளியே வர வேண்டும். நாரும் மாஸ்க் அணியக் கூடாது, தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முடித்தார்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது மன்சூர் சொன்ன கருத்துகள். இதையடுத்து அவர் மீது தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து தனக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று மன்சூர் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
-
கிரிக்கெட்2 days ago
மொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே!!
-
வணிகம்2 days ago
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!
-
சினிமா செய்திகள்2 days ago
படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!
-
சினிமா செய்திகள்2 days ago
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?