Connect with us

தமிழ்நாடு

‘இதை மட்டும் செஞ்சா மத்திய அரசே எல்லாருக்கும் தடுப்பூசி போட்டிருலாம்’- கே.எஸ்.அழகிரி யோசனை

Published

on

கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முன் வந்து குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி யோசனை கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில், மத்திய அரசுக்குத் தெளிவு ஏற்படுத்துகிற வகையில் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் போது சரியான வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு 50 சதவிகிதமும், மாநில அரசுகள் 50 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தவிர்த்து, மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்குச் சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

ஒரு தடுப்பூசிக்கு மூன்று விலைகள் நிர்ணயம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தடுப்பூசி ரூ.185 விலையில் விற்கும் போது, இந்தியாவில் ரூ.400, ரூ.600, ரூ.1,200 என்று விற்பது எந்த வகையில் நியாயம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதேபோல, தடுப்பூசி விலையை நிர்ணயிக்கிற உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏன் வழங்கியது என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ‘இதற்கெல்லாம் என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது, கால அவகாசம் தேவை’ என்று மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியிருக்கிறார். இதன்மூலம் இந்திய மக்களை அச்சுறுத்துகிற கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு எத்தகைய தடுமாற்றத்துடன், தெளிவான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

South Africa plan to sent back 1 Million Vaccine Doses

கொரோனா என்பதைப் பேரிடராகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு உரிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே 4 மாதங்கள் விரயமாகி உள்ளன. தடுப்பூசி உற்பத்தியை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதோடு, கூடுதலாகப் பல நிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம். இன்றைக்கு சீரம் நிறுவனம் மாதம் 6 கோடி தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 1 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்கின்றன. ஜூலை முதல் உற்பத்தியைக் கூட்டுவதாக உறுதி செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதென மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில் 12 கோடி ஏற்கனவே போடப்பட்டுள்ளன. மேலும் ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன. இந்நிலையில், புதிய தடுப்பூசி கொள்கையின்படி 18 வயதிற்கு மேற்பட்ட 63 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் போட 120 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.

மத்திய அரசு கொள்முதல் விலையான ரூ.150 விலையில் கூட, தயாரிப்பு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச லாபம் இருக்கிறது. தற்போது தடுப்பூசி கொள்கையின்படி மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.34,400 கோடியும் செலவாகும். இதன்மூலம் மொத்தம் ரூ.42,000 கோடி தான் செலவாகும். ஏற்கனவே, 2020-21 பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும். தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காகப் போராடுகிற மக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை பிரதமர் மோடி புரிந்து கொண்டு ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பிரதமர் மோடி நினைத்தால், அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். இதை செய்வதன் மூலம், இந்திய மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு விளக்கமாக யோசனை கூறியுள்ளார் ஆழகிரி.

Advertisement

தமிழ்நாடு

எனது தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை: முக அழகிரி வாழ்த்து

Published

on

By

என் தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை என முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்டாலினின் சகோதரருமான முக அழகிரி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சராக உள்ள ஸ்டாலினிஅ பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும் என் தம்பி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சியை தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் முக அழகிரி அவர்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்தது என்பதும் ஸ்டாலினால் தான் திமுகவில் இருந்து முக அழகிரி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் தற்போது ஸ்டாலினுக்கு அழகிரி தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

தமிழ்நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

Published

on

By

முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜய் வசந்த் இடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொன்ராதாகிருஷ்ணன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என பாஜக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

தமிழ்நாடு

இன்று முதல் எந்தெந்த கடைகள் எத்தனை மணி நேரம் இயங்க வேண்டும்: தமிழக அரசு விளக்கம்

Published

on

By

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

குறிப்பாக இன்று முதல் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கபடாது என்றும் ஒரு சில கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பால் மற்றும் மருந்து கடைகள் அனைத்து நாட்களிலும் அனைத்து நேரங்களிலும் இயங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை.

அதே போல் மளிகை மற்றும் காய்கறி கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கக்கூடாது என்றும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை இயங்கலாம் என்றும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கடையில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் பார்சல் மட்டுமே அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீர் கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து இறைச்சி மீன் மட்டன் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கலாம். சனி ஞாயிறு கிழமைகளில் முழுமையாக மூடப்பட வேண்டும்.

மற்ற அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. எல்லா நாட்களிலும் மூடப்பட வேண்டும்.

சினிமா தியேட்டர், கலாச்சாரச் செயல்பாடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு அனைத்து நாட்களிலும் அனுமதி இல்லை. இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Continue Reading
தினபலன்5 mins ago

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்1 hour ago

ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் காலமானார்: டி ராஜேந்தர் இரங்கல்

தமிழ்நாடு1 hour ago

எனது தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை: முக அழகிரி வாழ்த்து

சினிமா செய்திகள்1 hour ago

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தமிழ்நாடு2 hours ago

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்தியா2 hours ago

2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்4 hours ago

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

சினிமா செய்திகள்4 hours ago

கொரோனாவுக்கு பலியான நகைச்சுவை நடிகர் பாண்டு!

தமிழ்நாடு6 hours ago

இன்று முதல் எந்தெந்த கடைகள் எத்தனை மணி நேரம் இயங்க வேண்டும்: தமிழக அரசு விளக்கம்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending