தமிழ்நாடு
கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா? சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்!


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் கற்றுத்தரப்படாது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்குத் தமிழ் படிக்க விருப்பம் இருந்தால் அவர்களுக்கு மட்டும் கற்றுத்தரப்படும். இதற்கான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது ஏற்புடையது அல்ல. கேந்திர வித்தியாலயா கல்வி நிறுவனம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குக் கீழ் தான் வருகிறது, மேலும் தமிழகத்தில் உள்ள தமிழ் கற்றல் ஆகிய விதிகளுக்கு எதிராக இது உள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் மாணவர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏற்படையது அல்ல. எனவே கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் ஆசியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற கிளை மதுரை பிரிவில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 2006-ம் ஆண்டு கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 10 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக அறிவித்தது எப்படி என்று மனுதாரர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.
கேந்திரிய வித்தியாலயா பள்ளி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காகதான் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களிள் 50 சதவீதத்தினர் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களாக உள்ளனர். எனவே தமிழ் விருப்ப பாடமாகக் கற்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா? என கேள்வி எழுப்பினர். இது போன்ற வாதங்களை நாங்கள் ஏற்கமாட்டோம். பிரதமர் தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் நீங்கள் இந்தி, ஆங்கிலத்தை மற்றும் கற்றுக்கொடுப்பது ஏன்? கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் விருப்ப பாடமாக உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழ் மொழி மட்டும் என நாங்கள் கேட்கவில்லை. அனைத்து பிராந்திய மொழிகளுக்காகவும் சேர்த்துத்தான் கேட்கிறோம். இப்படியே சென்றால் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய் மொழியில் கற்கும் சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. வழக்கு குறித்த விரிவான தீர்ப்பை வழங்க, நாளை மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு
சசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே!!!


இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் கம்-பேக் கொடுப்பாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்குத் தலைமை ஏற்ற சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆனார். தொடர்ந்து தமிழக முதல்வராக பதவியேற்க திட்டம் போட்டார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறைத் தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார் சசிகலா.
இது குறித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடியார், ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.
தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்காவது தெரியுமா? ஸ்டாலின் கேள்வி


ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று திமுக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு தான் இருந்தது. அண்ணா புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் எப்படி இறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதே போல் எம்ஜிஆருடைய மரணமும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. சும்மா இட்லி சாப்பிட்டார்கள், டிவி பார்த்தார்கள் என்று தான் சொல்லி வருகிறார்கள். சாதாரணமாக ஒரு துக்க வீட்டிற்கு சென்றாலே, இறந்தவர் எப்படி இறந்தார், என்ன ஆச்சு என்று கேட்கிறோம்.
ஒரு சாமானியரின் மரணமே நாம் தெரிந்துகொள்கிறோம். உற்றார் உறவினர்களும் சொல்லி விடுகிறார்கள். ஆனால், ஒரு மாநிலத்திற்கே முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது’ இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு
பொங்கல் பரிசு எல்லோருக்கும் கிடைத்ததற்கு நான் தான் காரணம்: செல்லூர் ராஜூ அடம்


பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘எம்ஜிஆர் பணத்திற்காக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். நடித்த எல்லா படங்களிலும் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டியவர் எம்ஜிஆர்.
ஆனால் இப்போது எல்லாம் வெறும் 4 நாள் படம் ஓடினாலே போதும். தலைவா நீ தான் முதல்வர் என்று போஸ்டர் ஒட்டி விடுகின்றனர். திமுகவை வளர்த்துவிட்டவர் அண்ணா தான். ஆனால், திமுக பேனர், விளம்பரத்தில் அண்ணா படமே இருக்காது. முழுக்க கருணாநிதியின் குடும்ப படமே உள்ளது.
மதுரை சிறப்பாக வர வேண்டும் என்று எந்நாளும் நினைத்துக்கொண்டிருப்பவன் நான். பொங்கல் பரிசு மக்கள் அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம்’.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.