தமிழ்நாடு
‘சரி, நாங்களே கட்சி ஆரம்பிச்சுகிறோம்..’ கடுப்பான நிர்வாகி! ரஜினி பெயரிலேயே கட்சி தொடக்கம்!!


நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த நிலையில், அவரது மன்ற நிர்வாகி ஒருவர் ரஜினியின் பெயரிலேயே கட்சி தொடங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ். ராஜன். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்த பல லட்ச ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். ஆனால், கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினி கூறியதும், கடுப்பான ராஜன், ரஜினியின் பெயரிலேயே கட்சி தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.எஸ். ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் அவரது அறிவிப்பு அனைத்து மக்களுக்கும், அவரை இன்னும் உயிருக்கு உயிராய் நேசிக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அரசியலுக்கு வராததற்கு அவர் அளித்த உருக்கமான விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனாலும் எங்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தந்தது. வலியை தந்துள்ளது. ரஜினிகாந்தின் படம் ஒரு தீபாவளியன்று ரிலீஸ் ஆகாவிட்டாலே அதை கருப்பு தீபாவளி என்று நாங்கள் கொண்டாடமாட்டோம்.
இப்படியான சூழலில் அரசியல் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பதை எப்படி கையாள்வது? என்பது தெரியவில்லை. ரசிகர்கள் மட்டுமன்றி மக்கள் அனைவருக்கும் இது பெரிய ஏமாற்றம். ரஜினிகாந்த் கட்சி தொடங்காத நிலையில் நாங்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து புதிய கட்சி தொடங்கியுள்ளோம்.
அனைத்து இந்திய ரஜினி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி, அரசியலில் குதித்து மக்கள் சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளோம். கட்சி கொடி, சின்னம், கொள்கை தொடர்புடைய மற்ற விஷயங்கள் பற்றி மக்கள் மற்றும் ரசிகர்களிடம் கருத்துக்கேட்டு, கன்னியாகுமரியில் வைத்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம்’. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து!


அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளிலும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து இன்று அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அதிமுக தரவில்லை என தேமுதிக அதிருப்தி அடைந்து இருப்பதால் தான் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
அதிமுக கூட்டணியில் ஒருவேளை தேமுதிக இடம் பெறவில்லை என்றால் தேமுதிகவின் அடுத்தகட்ட நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாடு
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய விலை என்ன?


தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பு என்றும் எந்த விலையில் தங்கம் வாங்கினாலும் அது நமக்கு லாபத்தை கொடுக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததால் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பலர் அறிவுறுத்தினர்.
இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் 37 ஆயிரத்து 912 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை தற்போது 80 காசுகள் உயர்ந்து 73.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ 73 ஆயிரத்து 300 என்ற விலையில் விற்பனையாகி வருவதாகவும் நகைக்கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்
தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட அனுபவம்: நர்ஸ் நெகிழ்ச்சி


இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் பொதுமக்களுக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த தடுப்பூசியை போடுவதற்கு யாரும் எந்தவித அச்சமும் பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தினார்.