தமிழ்நாடு
பிளஸ் டூ தேர்வு தேதிகளில் மாற்றமா? – அமைச்சர் சொன்ன தகவல்


தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்வு தேதிகளில் மாற்றம் ஏதேனும் செய்யப்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பும் பயிலும் மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. மே மாதம் 21 ஆம் தேதி கடைசித் தேர்வு முடியும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச் சந்திக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.
இப்படியான சூழலில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. சீக்கிரமே 10 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு நடைபெறும் கால அட்டவணை விவரம்:
இந்நிலையில் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்குமா என்கிற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘உரிய ஆலோசனைக்குப் பின்னர் தான், தெளிவான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பிளஸ் டூ தேர்வு தேதிகள் குறித்து எந்த வித குழப்பமுக் கொள்ளத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்


பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் மனித நேய மக்கள் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு
திமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தநிலையில் சற்றுமுன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்
வைகோவின் மதிமுக கட்சிக்கு அதிகபட்சம் 5 அல்லது 7 தொகுதிகள் மட்டுமே தருவதாக திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.
தமிழ்நாடு
அதிமுக விருப்பமனு தேதி திடீர் மாற்றம்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான பெறுதல், நேர்காணல், தேர்தல் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றை கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை மார்ச் 5ஆம் தேதி வரை தரலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போதிய அவகாசம் இல்லாததால் அந்த தேதி மார்ச் 3ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.