தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்று மாநிலங்களிலும் இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிக அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வால்பாறை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லையில் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும்.
இதனால் காவேரியில் அதிக வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே காவிரியில் வெள்ளம் அதிகம் ஆகியுள்ளது.
தமிழ்நாடு
சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டதா?


சென்னை ஈவேரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையில் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயராக ஈவேரா பெரியார் சாலை மாறியுள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் இணையதளத்திலும் டிரங்க் ரோடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் ஈவேரா பெரியார் சாலை என்று தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையிலும் இணையதளத்திலும் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
இன்றும் நாளையும் மெரீனாவில் அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!


இன்றும் நாளையும் சென்னை மெரினா உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாள் என்பதும் நாளை தமிழ் புத்தாண்டு தின விடுமுறை என்பதும் தெரிந்ததே. இதனால் இந்த இரண்டு நாட்களிலும் சென்னை மெரினா உள்பட பல கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினால் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தினமும் 2,000 பேருக்கு மேல் புதிதாக சென்னையில் பரவி வரும் நிலையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியமானது என்று ஒரு சிலர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு
இன்றும் நாளையும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சூப்பர் சலுகை!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவ்வப்போது மெட்ரோ நிர்வாகம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களில் 50 சதவீத கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இன்றும் நாளையும் தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ்வருடப்பிறப்பு வருவதை அடுத்து அதே சலுகையை மீண்டும் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் என்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதும், இதில் பயணம் செய்வதால் பயணக்கட்டணம் குறைவாக உள்ளது என்பது மட்டுமின்றி நேரம் மிச்சமாகிறது என்பதும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்களுக்கும். விமான நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்பவர்களுக்கும் மிகப்பெரிய வசதியாக இந்த மெட்ரோ ரயில்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு23 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?