தமிழ்நாடு
மீடியா மூலமாக தமிழ் மொழியை வளர்க்க அரசு சார்பில் ‘தூய தமிழ் ஊடக விருது’ அறிவிப்பு!


மீடியா மூலமாக தமிழ் மொழியை மேன்மைப்படுத்தும் விதமாக தமிழக அரசு’தூய தமிழ் விருது’ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அன்றாடம் மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான செய்திகளை முன்னறிந்து கொடுக்கும் செம்மாந்த பணிகளைச் சிறப்புடன் செய்துவருகின்ற காட்சி, அச்சு ஊடகங்கள் மொழிக்காப்பிலும் முகாமையான பங்காற்றுகின்றன.
ஊடகமொழியே உலகமொழியாகிவிட்ட இன்றைய நிலையில், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் உதவியோடுதான் நல்ல தமிழ்ச் சொற்களையும் காலத் ற்கேற்ற பு ய தமிழ்க் கலைச்சொற்களையும் புழங்குமொழியாக்க முடியும்.
மொழிக்கலப்பைத் தவிர்த்தலே தமிழ்மொழியைக் காப்பதற்கும் வளப்படுத்துவதற்குமான அடிப்படையாகும். எனவே, தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும் பாராட்டி ஊக்கமளிக்கும் வகையில், ‘தூய தமிழ் ஊடக விருதினை’த் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தூயதமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்குச் செய்திகளை வழங்கும் ஒரு காட்சி ஊடகத்தையும், ஓர் அச்சு ஊடகத்தையும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தின் வழியாகத் தேர்வுசெய்து, தமிழ் அகராதியியல் நாள் விழா’வின்போது ‘தூய தமிழ் ஊடக விருதும்’ பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ஓர் ஊடகத்திற்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)மும், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரைச் சான்றிதழும் வழங்கப்படும்.
விருதுபெறத் தகுதிவாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனம் சொற்குவை.காம் (https://sorkuvai.com/) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி 29.01.2021-ஆம் நாளுக்குள் [email protected] முகவரிக்கு அனுப்புவதுடன், தங்கள் நிறுவனம் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியதை உறுதிசெய்யும் வகையில் சான்றுகளை இணைத்து, கீழ்க்கண்ட இயக்கக முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ 29.01.2021 மாலைக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
இயக்கக முகவரி : இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் ட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75,
சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028.
இயக்குநர்
தமிழ்நாடு
சசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே!!!


இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் கம்-பேக் கொடுப்பாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்குத் தலைமை ஏற்ற சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆனார். தொடர்ந்து தமிழக முதல்வராக பதவியேற்க திட்டம் போட்டார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறைத் தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார் சசிகலா.
இது குறித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடியார், ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.
தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்காவது தெரியுமா? ஸ்டாலின் கேள்வி


ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று திமுக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு தான் இருந்தது. அண்ணா புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் எப்படி இறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதே போல் எம்ஜிஆருடைய மரணமும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. சும்மா இட்லி சாப்பிட்டார்கள், டிவி பார்த்தார்கள் என்று தான் சொல்லி வருகிறார்கள். சாதாரணமாக ஒரு துக்க வீட்டிற்கு சென்றாலே, இறந்தவர் எப்படி இறந்தார், என்ன ஆச்சு என்று கேட்கிறோம்.
ஒரு சாமானியரின் மரணமே நாம் தெரிந்துகொள்கிறோம். உற்றார் உறவினர்களும் சொல்லி விடுகிறார்கள். ஆனால், ஒரு மாநிலத்திற்கே முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது’ இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு
பொங்கல் பரிசு எல்லோருக்கும் கிடைத்ததற்கு நான் தான் காரணம்: செல்லூர் ராஜூ அடம்


பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘எம்ஜிஆர் பணத்திற்காக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். நடித்த எல்லா படங்களிலும் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டியவர் எம்ஜிஆர்.
ஆனால் இப்போது எல்லாம் வெறும் 4 நாள் படம் ஓடினாலே போதும். தலைவா நீ தான் முதல்வர் என்று போஸ்டர் ஒட்டி விடுகின்றனர். திமுகவை வளர்த்துவிட்டவர் அண்ணா தான். ஆனால், திமுக பேனர், விளம்பரத்தில் அண்ணா படமே இருக்காது. முழுக்க கருணாநிதியின் குடும்ப படமே உள்ளது.
மதுரை சிறப்பாக வர வேண்டும் என்று எந்நாளும் நினைத்துக்கொண்டிருப்பவன் நான். பொங்கல் பரிசு மக்கள் அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம்’.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.