Connect with us

தமிழ்நாடு

ஃபேஸ்புக் பழக்கம்: பெண்ணாக நடித்த ஆணிடம் 80 ஆயிரத்தை இழந்த பரிதாபம்!

Published

on

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த 45 வயதான தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் காயத்ரி என்ற பெயருடைய நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. காயத்ரி ஃபேஸ்புக்கில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஃபேஸ்புக் மூலமாக பேசி வந்துள்ளனர். அப்போது காயத்ரி என்ற பெயரில் உள்ள நபர் தனக்கு வாய் பேச முடியாது எனவும், திருமணமாகி கணவர் வெளிநாட்டில் உள்ளார் எனவும் தற்போது வீட்டில் தனியாக உள்ளதாக தனசேகரனிடம் கூறியுள்ளார். இவரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றிக்கொண்டு வாட்ஸ்அப்பிலும் பேசி வந்துள்ளனர்.

ஒருநாள் தனக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும், பணத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் காயத்ரி என்ற பெயரில் உள்ள நபர் கூற, தனசேகரன் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதனையடுத்து அவரை நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை வேறுறொரு வாலிபரை துணைக்கு அழைத்து தாக்கியுள்ளார் காயத்ரி என்ற பெயரில் இருந்த ஆண்.

அப்போது தான் தனசேகரனுக்கு தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது. தனசேகரை தாக்கிய அந்த நபர்கள் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்து சென்று அதன் மூலம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் அந்த வாலிபர்கள் தங்கள் பைக்கில் தனசேகரனை ஏற்றிக்கொண்டு போய் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த நபர் வடசேரி காவல்நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் குமரி மாவட்ட காரங்காடு கல்லுவிளையை சேர்ந்த பொன்னுலிங்கம் மற்றும் செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் என்பவர்கள் தான் இந்த மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதும் இதையையே வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் 2019: நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

Published

on

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

மறுபக்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று திமுக தரப்பு கூறி வருகிறது.

Continue Reading

தமிழ்நாடு

இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? தெரியுமா?

Published

on

2018-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஏற்ற தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இது சென்ற முறையே மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நகரங்கள் தவிரப் பிற இடங்களில் மக்கள் எப்போதும் போலவே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.

எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்புகொண்ட போது, சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு சென்ற ஆண்டை விட அதிகளவில் மக்கள் வரவேற்பை அளிப்பார்கள் என்று எதிபார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்கள்.

Continue Reading

தமிழ்நாடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிய மாற்றம்!

Published

on

10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணையிலும் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)

வேலை வாய்ப்பு11 hours ago

தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

வீடியோ செய்திகள்11 hours ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்11 hours ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வீடியோ செய்திகள்12 hours ago

“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை

வீடியோ செய்திகள்12 hours ago

கடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்

வீடியோ செய்திகள்12 hours ago

ஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்

Keerthi Suresh - Rajinikanth - Thalaivar 168
சினிமா செய்திகள்18 hours ago

#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்!

வணிகம்19 hours ago

எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

வணிகம்19 hours ago

5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்!

வேலை வாய்ப்பு4 weeks ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா5 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு4 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா5 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு5 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்4 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்5 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்11 hours ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்11 hours ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வீடியோ செய்திகள்12 hours ago

“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை

வீடியோ செய்திகள்12 hours ago

கடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்

வீடியோ செய்திகள்12 hours ago

ஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்

இந்தியா2 days ago

காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

வீடியோ செய்திகள்2 days ago

முதல் லெட்டருக்கே செருப்படி தான்…!

வைரல் செய்திகள்2 days ago

மீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை

வைரல் செய்திகள்2 days ago

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

வீடியோ செய்திகள்2 days ago

சென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது

Trending