சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் விரைவில் வெளியிடும் அறிவிப்பு என்ன? லீக்கான தகவல்!


நடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார்,
கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள் நாளை ரஜினிகாந்த் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு என்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் வெளியிடவுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள சூழலில் அரசியல் கட்சி தொடங்குவது சரியானதாக இருக்காது. எனவே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கலாம். அதுவரை ரஜினி மக்கள் மன்ற நற்பணிகள் தொடரட்டும் என்று தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு, இந்த தகவல் அதிருப்தி அடையச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி தொடங்கமாட்டார் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சினிமா செய்திகள்
கானா நாயகனாக கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ட்ரெய்லர்..!


கானா நாயகனாக நடிகர் சந்தானம் கலக்கும் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
நடிகர் சந்தானத்துக்கு A1 என்ற வெற்றிப் படத்தை அளித்த இயக்குநர் ஜான்சன் தான் தற்போது பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். மிகவும் மூத்த ஒளிப்பதிவாளர் ஆன ஆர்தர் விலசன் பாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஆகப் பணியாற்றி உள்ளார். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
Music filled fun trailer of @iamsanthanam ‘s #ParrisJeyaraj OUT NOW 🔛https://t.co/aX9ZRCVl5D#ParrisJeyarajTrailer#JohnsonK @Music_Santhosh #LarkStudios @Kumarkarupannan @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @PrakashMabbu pic.twitter.com/jNQ8XXmdTV
— Think Music (@thinkmusicindia) January 18, 2021
கானா நாயகனாகவே நடிகர் சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் ஆக நடித்துள்ளதால் முழுக்க முழுக்க கானா இசையில் புகுந்து விளையாடி உள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தில் நாயகிகள் ஆக அனைகா சோதி மற்றும் சஸ்திகா ராஜேந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் மொட்டை ராஜேந்திரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இன்னும் சில வாரத்தில் திரை அரங்கங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
இயக்குநர் மணிரத்னத்தின் மெகா பட்ஜெட் படத்தில் நாயகன் ஆகிறார் யோகிபாபு!


இயக்குநர் மணிரத்னின் மெகா பட்ஜெட் படம் ஒன்றின் மூலம் கதாநாயகன் ஆகியுள்ளார் நடிகர் யோகி பாபு.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ஆன்தாலஜி படம் ‘நவரசா’. இதில் மொத்தம் 9 கதைகள் ஒன்றாக வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு கதையில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த 9 கதைகளை இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், ரதிந்திரன் பிரசாத், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி, கேவி ஆனந்த் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் 9 கதைகளைத் தயார் செய்து வருகின்றனர்.
இதில் பொன்ராம் ஒரு கதையை இயக்குவதாக இருந்தது. ஆனால், பொன்ராம் கடைசி நேரத்தில் படத்தில் இருந்து விலகியதால் இயக்குநர் பிரியதர்ஷன் இந்த ஆந்தாலஜி தொகுப்பில் இணைந்துள்ளார். ஆக, தற்போது பிரியதர்ஷன் இயக்கத்திலான கதையில் தான் யோகி பாபு நாயகன் ஆக உருவெடுத்துள்ளார். தமிழின் பல முக்கிய நடிகர்கள், நடிகைகள் இந்த ஆந்தாலஜி தொகுப்பில் இணைந்துள்ளனர்.
இதனால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழில் வெளியாகும் மாபெரும் பட்ஜெட் திரைப்படம் ஆகும்.
சினிமா செய்திகள்
பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்… பத்மவிபூஷனை திருப்பி அளிக்கிறாரா இளையராஜா?


இசை அமைப்பாளர் இளையராஜா தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை மத்திய அரசிடமே திருப்பி வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரசாத் ஸ்டுடியோஸ் மற்றும் இளையராஜா இடையே எழுந்துள்ள பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் பிரசாத் ஸ்டுடியோசை விட்டே வெளியேறிவிட்டார் இளையராஜா. இந்த விவகாரம் இதோடு முடிந்தது என்று நினைத்தால் அது தான் இல்லை. தொடர் கதையாகி வருகிறது பிரசாத் ஸ்டுடியோஸ் இளையராஜா விவகாரம்.
இதுகுறித்து திரைப்பட இசைக்கலைகர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கூறுகையில், “பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் இளையராஜாவை அவமானப்படுத்தியதி மிகப்பெரிய தவறு. இந்த விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை மத்திய அரசிடமே திருப்பி அளிக்க உள்ளதாக இளையராஜா என்னிடம் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தப் பிரச்னைக்காக மத்தியாரசின் விருதை திருப்பி அளிப்பதில் என்ன நியாயம் உள்ளது? என ட்விட்டரில் நெட்டிசன்கள் மத்தியில் தனி விவாதமே எழுந்துள்ளது.