சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் விரைவில் வெளியிடும் அறிவிப்பு என்ன? லீக்கான தகவல்!


நடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார்,
கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள் நாளை ரஜினிகாந்த் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு என்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் வெளியிடவுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள சூழலில் அரசியல் கட்சி தொடங்குவது சரியானதாக இருக்காது. எனவே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கலாம். அதுவரை ரஜினி மக்கள் மன்ற நற்பணிகள் தொடரட்டும் என்று தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு, இந்த தகவல் அதிருப்தி அடையச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி தொடங்கமாட்டார் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சினிமா செய்திகள்
சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் நாரதன் இயக்கிய படம் மஃப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, கவுதம் கார்த்திக் இருவரும் நடித்து வருகின்றனர்.
முதலில் இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய நாரதனே இயக்கினார். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தடையானது. படப்பிடிப்பு தடையானதுக்கு சிம்பு தான் காரணம். இந்த படத்தை டிராப் செய்கிறேன் என்று ஞானவேல் ராஜா அறிவித்தார்.
ஆனால் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சிம்பு உடல் எடையைக் குறைத்தது மட்டுமல்லாமல், வேகமாகத் தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தும் வருகிறார்.
பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தில் 30 நாட்களில் நடித்துக் கொடுத்தார். தொடர்ந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவும் தறுவாயில் உள்ளது.
இந்த நேரத்தில் இடையில் நின்ற அந்த படத்தை தூசிதட்டி மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஆனால் இயக்குநர் நாரதன் கேஜிஎஃப் யாஷ் நடிப்பில் வெறு படத்தை இயக்குவதில் பிசி ஆகிவிட்டார்.
எனவே சில்லுனு ஒரு காதல் படத்தை எடுத்த கிருஷ்ணா மஃப்டி படத்தை இயக்குகிறார். படத்துக்குப் பத்து தல என்று பெயரும் சூட்டப்பட்டது. தொடர்ந்து இப்போது பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
பத்து தல படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ப்ரியா பவானி ஷங்கர், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Glad to reveal the first look of #PathuThala @kegvraja @SilambarasanTR_ @Gautham_Karthik@NehaGnanavel @nameis_krishna @poetmanush @makkastudios @priya_Bshankar @Iamteejaymelody@KalaiActor @PathuthalaMovie pic.twitter.com/wvn9Ej6sj5
— A.R.Rahman (@arrahman) January 18, 2021
சினிமா செய்திகள்
தளபதி 65 படம் பற்றி இந்த அப்டேட் உங்களுக்குத் தெரியுமா?


தளபதி 65 படம் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய்யின் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெலியாகியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது போல, தளபதி 65-ல் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண் விஜய் ஏற்கனவே தல நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். இப்போது தளபதி படத்திலும் அருண் விஜய் வில்லனாக நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தளபதி 65 படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலில் தளபதி 65-ல் விஜய்க்கு ராஷ்மிகா மந்தானா, நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
தளபதி படத்துக்கு இயக்குநர் நெல்சனின் நண்பரான அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா, தயாரிப்பில் உள்ள டாகடர் திரைப்படத்துக்கும் அனிருத் தான் இசை அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
கானா நாயகனாக கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ட்ரெய்லர்..!


கானா நாயகனாக நடிகர் சந்தானம் கலக்கும் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
நடிகர் சந்தானத்துக்கு A1 என்ற வெற்றிப் படத்தை அளித்த இயக்குநர் ஜான்சன் தான் தற்போது பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். மிகவும் மூத்த ஒளிப்பதிவாளர் ஆன ஆர்தர் விலசன் பாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஆகப் பணியாற்றி உள்ளார். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
Music filled fun trailer of @iamsanthanam ‘s #ParrisJeyaraj OUT NOW 🔛https://t.co/aX9ZRCVl5D#ParrisJeyarajTrailer#JohnsonK @Music_Santhosh #LarkStudios @Kumarkarupannan @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @PrakashMabbu pic.twitter.com/jNQ8XXmdTV
— Think Music (@thinkmusicindia) January 18, 2021
கானா நாயகனாகவே நடிகர் சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் ஆக நடித்துள்ளதால் முழுக்க முழுக்க கானா இசையில் புகுந்து விளையாடி உள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தில் நாயகிகள் ஆக அனைகா சோதி மற்றும் சஸ்திகா ராஜேந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் மொட்டை ராஜேந்திரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இன்னும் சில வாரத்தில் திரை அரங்கங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.