சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் விரைவில் வெளியிடும் அறிவிப்பு என்ன? லீக்கான தகவல்!


நடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார்,
கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள் நாளை ரஜினிகாந்த் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு என்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் வெளியிடவுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள சூழலில் அரசியல் கட்சி தொடங்குவது சரியானதாக இருக்காது. எனவே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கலாம். அதுவரை ரஜினி மக்கள் மன்ற நற்பணிகள் தொடரட்டும் என்று தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு, இந்த தகவல் அதிருப்தி அடையச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி தொடங்கமாட்டார் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சினிமா செய்திகள்
மாஸ்டர் குழுவினருடன் தளபதியின் பொங்கல் கொண்டாட்டம்… வைரலாகும் கலகலப்பான வீடியோ


மாஸ்டர் படக்குழுவினருடன் தளபதி விஜய் கொண்டாடிய பொங்கல் விழா வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியானது. 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவின் படி படம் வெளியானது. கொரோனாவுக்குப் பின் வெளியாகும் மாஸ் ஹீரோ ஒருவரின் படம் என்பதால் மாஸ்டர் திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
எதிர்பார்த்த வசூலை பெற்றுள்ள போதும் திரை விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களேயே மாஸ்டர் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த சூழலில் மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிய அத்தனைப் பணியாளர்களுடனும் இணைந்து மாஸ்டர் பொங்கலாக தளபதி விஜய் கொண்டாடி உள்ளார். பட்டு வேட்டி சட்டையில் மாஸாக பொங்கல் விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என விஜய் கலக்கி உள்ளார்.
உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாயகி மாளவிகா, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் அத்தனை நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என அத்தனைப் பேரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
Here’s a glimpse of how we celebrated Master Pongal this time, last year! 🤩
Kondaattam kalai kattatum nanba! Happy Pongal ❤️#MasterPongal #Master pic.twitter.com/1T2Df42VfU
— XB Film Creators (@XBFilmCreators) January 15, 2021
சினிமா செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டாரை கேலி செய்கிறாரா ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன்..?- கொதிக்கும் ரசிகர்கள்


மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளிவிகா மோகனன் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து கேலி ஆக பேசியுள்ளது ரசிகர்களைக் கோபம் அடையச் செய்துள்ளது.
மாளவிகா மோகனன் மாஸ்டர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போத்கு பங்கேற்று வருகிறார். அது போன்று ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று அவர் பேசுகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்து கேலியாக கிண்டல் செய்து பேசியதாகத் தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில் மாளவிகா, “நான் பார்த்த தமிழ்ப் படம் ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கக்கூடிய நடிகை ஒருவர் முகம் நிறைய மேக் அப் போட்டுக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பார்”.
மேற்கூறிய வசனத்தை மாளவிகா பேசியதில் இருந்து அவருக்கு எதிராக ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ராஜா ராணி படத்தில் தான் நடிகை நயன்தாரா மேக் அப் போட்டுள்ளது குறித்து மாளவிகா கேலி செய்கிறார் என அவருக்கு எதிராக லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர.
சினிமா செய்திகள்
ஃபிட்னஸ்-க்காக படப்பிடிப்புக்கு தினமும் சைக்கிளில் செல்லும் நடிகை… வைரல் புகைப்படங்கள்


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகை தினமும் ஷீட்டிங் செல்ல சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறாராம்.
நாட்டின் முன்ன்ணி மூன்று சினிமா தளங்களான கோலிவு, டோலிவுட், பாலிவுட் என மூன்றிலும் டாப் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தற்போது பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கன் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேடட் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாலிவுட் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
இதனால் தனது வீட்டிலிருந்து தினமும் 12 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்துக்கும் அங்கிருந்து வேலை முடித்து மீண்டும் சைக்கிள் மூலமாகவே 12 கி.மீ தூரம் வீட்டுக்கும் வந்து போகிறாராம் ரகுல். உடல் நலத்துக்காகத் தான் இப்படி சைக்கிளில் பயணிப்பதாகக் கூறும் ரகுல் மக்களுக்கு தனது சைக்கிள் ஃபிட்னஸ் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் எனக் கூறுகிறார்.
ரகுல் ப்ரீத்-ன் பாதுகாப்புக்காக மட்டும் தினமும் இரு வேளையும் அவருக்குப் பின்னாலேயே ஒரு காரும் பாடிகாடும் சென்று வருகிறார்களாம். ஆனால், ரகுலின் சைக்கிள் பயணம் பல முன்னணி இளம் நடிகைகளை வாய் பிளக்க வைத்துள்ளதாம்.