Connect with us

தமிழ்நாடு

குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்

Published

on

சென்னை: குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குட்கா ஊழல் குறித்து ஜார்ஜ் விளக்கம் அளித்தார்.

அதில்,குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். இதில் பணம் கைமாறி இருக்கிறது.

குட்காவை வைத்து முறைகேடு நடந்து இருக்கிறது. இதுகுறித்து நான் கொடுத்த புகார்களை விசாரிக்கவில்லை.

ஆனால் யாருக்கு பணம் சென்றது என்று தெரியாது. அதை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாடு

விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா!

Published

on

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

செப்டம்பர் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பிரேமலதாவும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவரைத் தொடர்ந்து, கட்சி பொருளாளரும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

மனைவியை ஜிம்முக்கு அனுப்பிய கணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published

on

மதுரையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனை விட்டுப் பிரிந்து, ஜிம் மாஸ்டருடன் மனைவி சென்ற சம்பவம் அந்த குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மதுரை விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கனிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தார் சம்மதத்துடன் மூன்று ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இத்தனை நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த போது கனிமொழியின் கர்பப்பையில் நீர் கட்டிகள் உள்ளன. எனவே சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

எனவே தனது வீட்டில் அருகில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது யோகேஷ் கண்ணா என்ற ஜிம் பயிற்சியாளருடன் ஏற்பட்ட நெருக்கத்தில் காதல் வயப்பட்டுள்ளார்.

இவர்களது காதல் செல்போனிலும் தொடர, கணவர் ராஜேஷ் எச்சரித்துள்ளார். ஆனாலும் கணவனை மறந்து காதலன் பக்கமே இருந்துள்ளார் கனிமொழி. ரஜேஷ் மற்றும் யோகேஷ் கண்ணா இருவர் இடையிலும் இதன் காரணமாக அவ்வப்போது சண்டையும் ஏற்பட்டுள்ளது.

பிரிச்னை பெரியதாகக் கனிமொழி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் செல்ல முடிவெடுத்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ் மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கனிமொழி நடந்த சம்பவத்தை யோகேஷிடம் தெரிவித்துள்ளார்.

உடனே ஜிம் மாஸ்டர் யோகேஷ், கனிமொழி வீட்டுக்கு 4 பேருடன் வந்து கணவன் முன்பே, காதலியை அழைத்துச் சென்றுள்ளார். தடுக்க சென்ற ராஜேஷை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மனைவியை அழைத்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, மனைவியைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், பணம் அளிக்க வேண்டும் என்று ராஜேஷூக்கு போன் செய்துள்ளார் யோகேஷ். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தை வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், மனைவியை ஜிம்முக்கு அனுப்பியது ராஜேஷூக்கு இப்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்!

Published

on

இன்று காலை நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையில் உள்ள கருத்து முரன் போன்றவற்றுக்கு இடையில் இன்று அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போதைக்கு விவாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர் மற்றும், துணை முதல்வரைப் பாராட்டி தீர்மானம்.

2) கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வலியுறுத்த வேண்டும்.

3) மேகதாதுவில் அணை கட்ட முயற்ச்சித்து வரும் கர்நாடக அரசு தடுத்து நிறுத்தியதாக, தமிழக அரசுக்கு பாராட்டு.

4) நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

5) காவேரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

6) 2021 தேர்தலில் அதிமுக அரசு தொடர, தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

7) ரூ.14 ஆயிரம் கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை -குண்டாறு இணைப்பைச் செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி.

8) ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி.

9) மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.

10) 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி பெற்ற தமிழக அரசுக்கு நன்றி.

11) ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களுக்கு மானியத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

12) தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்க வேண்டும்.

13) கொரோனா காலத்தில் சிறப்பாக பொதுப்பணி செய்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி.

14) தமிழ் நாட்டில் கொரோனா காலத்திற்கு பிந்தைய சூழலில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடப் பொருளாதார வல்லுநர் திரு.சி.ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தற்கு, தமிழக முதல்வருக்குப் பாராட்டு.
15) நீட் தேர்வு அமலாகிடக் காரணமாக இருந்துவிட்டு, தற்போது கபட நாடகமாடி வரும் திமுகவுக்குக் கண்டனம்.
Image
Image
Image
Image
Image
Continue Reading
வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்3 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்4 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: