Connect with us

தமிழ்நாடு

“பல வரலாறுகளைப் படைத்த பல்கலைக்கழகம் மறைந்ததே” மருத்துவர் ராமதாஸ் இறங்கள்..!

Published

on

திமுகவின் தலைவருமான கலைஞர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து, எனது வாழ்நாளில் இதுவரை எதிர்கொள்ளாத பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன் என மருத்துவர் ராமதாஸ் தனது இறங்கலினை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான கலைஞர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து, எனது வாழ்நாளில் இதுவரை எதிர்கொள்ளாத பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன். எனது அரசியல் வாழ்க்கையில் நான் நிலைகுலைந்து போன தருணங்களில் நண்பர் கலைஞரின் மறைவு செய்தியை அறிந்த நேரமும் ஒன்று.

தமிழகத்தின் அரசியலாக இருந்தாலும், திரையுலகம் மற்றும் எழுத்துலகமாக இருந்தாலும் சரி… அவற்றில் கலைஞர் சாமானியனாக அறிமுகமாகி சமத்துவம் படைத்தவர். அவர் கோலோய்ச்சிய ஒவ்வொரு துறையிலும் அவர் ஏறிய உயரங்களை இனி எவராலும் எட்டிப்பிடிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

கலைஞரின் வாழ்க்கையை ஆய்வு செய்தால் தொடக்கம் முதல் இறுதி வரை நிறைந்து காணப்படுபவை எழுத்தும், எதிர்நீச்சலும் தான். பள்ளிக்குக் கூடத் துணையுடன் செல்லக்கூடிய 14 வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகை மூலம் தம்மை விட மூத்த இளைஞர்களைத் திரட்டி தமிழக மாணவர் சங்கத்தை உருவாக்கிய கலைஞருடைய பொதுவாழ்க்கையின் இன்றைய வயது 80. இதில் 5 தலைமுறை அரசியல் அடக்கம். இது யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியமாகும்.

20 வயதில் திரையுலகில் நுழைந்த கலைஞர், 21 ஆவது வயதில் எம்.ஜி.ஆர். நடித்த இராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதி தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். 30 வயதில், சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கு, கலைஞர் எழுதிய வசனம் தமிழ் திரையுலகின் போக்கை தலைகீழாக மாற்றியது. மனோகரா, பாலைவன ரோஜாக்கள், நீதிக்குத் தண்டனை என 20&க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதையும், வசனங்களும் சமூக மாற்றத்திற்கு வித்திட்டன என்றால் அது மிகையல்ல. ‘‘வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக?” என்று பராசக்தி படத்திற்காகக் கலைஞர் எழுதிய வசனம் இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

இலக்கிய உலகையும் இளவரசர் முதல் பேரரசர் வரை அனைத்து நிலையிலிருந்தும் ஆட்சி செய்தவர் கலைஞர் தான். குறளோவியம், தொல்காப்பிய உரை, பாயும் புலி பண்டாரக வன்னியன், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பொன்னர் சங்கர் உள்ளிட்ட அவரது படைப்புகள் இலக்கியக் கருவூலத்தின் இனிமையான சொத்துகள். நெஞ்சுக்கு நீதி அவரது வாழ்க்கை நிகழ்வுகளின் களஞ்சியம்.

அரசியலிலும் கலைஞர் முன்னேறிய வேகம் வியக்கத்தக்கது ஆகும். எந்தப் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்த கலைஞர், 33&ஆவது வயதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். 35 வயதில் சென்னை மாநகராட்சியின் அதிகாரபீடத்தில் திமுகவை அமரவைத்து அண்ணாவின் அசைக்க முடியாத தளபதி ஆனார். 37 வயதில் திமுகவில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கியது, 43 வயதில் மாநில அமைச்சர், 45 வயதில் தமிழக முதலமைச்சர் எனக் கலைஞர் அடைந்த முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டமோ, பின்னணியோ காரணமல்ல. அயராத உழைப்பும், தளராத முயற்சிகளும் தான் அவரை உயர்த்தின.

திமுகத் தொடங்கப்பட்ட காலத்தில் அதன் ஐம்பெரும் தலைவர்களாகப் போற்றப்பட்டவர்கள் அனைவரும் அறிவார்ந்த அரசியல் செய்து கொண்டிருந்த நிலையில், கலைஞர் மட்டும் தொண்டர்சார் அரசியலை செய்து கொண்டிருந்தார். அதனால் தான் ஐம்பெரும் தலைவர்களை மதித்த திமுகவினர் அனைவரும் கலைஞரைத் தான் ஆதரித்தனர். அதனால் தான் அண்ணாவுக்குப் பிறகு அவரால் முதல்வராக முடிந்தது. திமுகவின் வரலாற்றில் கலைஞர் 50 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். திமுகவின் ஒற்றைத் தலைவர் அவர் மட்டுமே. திமுகவுக்கு அவர் தலைவராக இருந்த காலத்தில் 19 ஆண்டுகள் மட்டும் தான் திமுக ஆட்சியில் இருந்தது. மற்ற காலங்களில் திமுக மிகப்பெரிய நெருக்கடிகளையும், பிளவுகளையும் எதிர்கொண்டது. ஆனால், அத்தனையையும் எதிர்கொண்டு கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிந்ததன் காரணம் அவர் எப்போதுமே தொண்டர்களின் தலைவராக வாழ்ந்ததும், வழிநடத்தியதும் தான்.

தமிழகத்தில் சமூக நீதியை நிலை நிறுத்தியதிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கியதிலும் கலைஞரின் பங்கு மகத்தானது. கலைஞரின் ஆட்சியில் தான் அதிகாரத்தின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமருவதற்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. தந்தை பெரியாரின் பள்ளியில் படித்தவர் என்பதாலும், அண்ணாவின் தம்பி என்பதாலும் சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவற்றுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்றிருப்பதற்கான காரணகர்த்தர்களில் கலைஞர் மிக முக்கியமானவர்.

திமுகத் தலைவர் கலைஞரிடம் நான் வியந்த விஷயம் நெருக்கடிகளுக்குப் பணியாமல் போராடும் குணம் தான். நெருக்கடி நிலை காலத்தில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உள்ளிட்ட திமுகத் தொண்டர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாயினர். ஆனாலும் அவற்றுக்குக் கலைஞர் பணியவில்லை என்பது மட்டுமின்றி, தேசிய தலைவர்கள் பலருக்குத் தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்ததன் மூலம் நெருக்கடி நிலை கொடுமைகளில் இருந்து காப்பாற்றினார்.

கலைஞர் மீது விமர்சனங்களும் உண்டு. பல்வேறு காலக்கட்டங்களில் அவரை நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். விமர்சனங்கள் சரியானவையாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கலைஞருக்கு உண்டு. கலைஞர் அரசின் செயல்பாடுகளை நான் கடுமையாக விமர்சித்த போதெல்லாம், ‘‘தலைவலிக்கு தைலாபுரத்திலிருந்து தைலம் வந்திருக்கிறது’’ என்று கூறி கடந்து செல்லும் பக்குவம் அவருக்கு இருந்தது. என் மீது அன்பும், அக்கறையும் காட்டியவர். கட்சிகளைக் கடந்து எனது கொள்கைப்பிடிப்பையும், போராட்ட குணங்களையும் பாராட்டியவர் கலைஞர் ஆவார்.

சில மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த கலைஞரை நான் சந்தித்த போது, என்னை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்தார். கடந்த ஜூலை 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காவிரி மருத்துவமனைக்கு அவரது நலம் விசாரிப்பதற்காகச் சென்ற போதும், அவரது உடல்நிலை திடமாக இருப்பதாகவும், விரைவில் இல்லம் திரும்புவார் என்றும் தம்பி ஸ்டாலின் கூறினார். அதன்பின் சக்கர நாற்காலியில் அமரும் அளவுக்கு அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்தது.

இதனால், அவர் விரைவில் நலம் பெற்று வருவார் என நம்பிக்கொண்டிருந்த வேளையில் தான் அவரது மறைவுச் செய்தி நம்மையெல்லாம் தாக்கியிருக்கிறது. அரசியல் உள்ளிட்ட பல்வேறு கலைகளின் கழகமாகத் திகழ்ந்த கலைஞரின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திமுக உடன்பிறப்புகளுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மருத்துவர் ராமதாஸ் இறங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

இதுதான் ரஜினியின் கட்சிக் கொடியா?

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் 168வது படமான அண்ணாத்த மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் நேற்று வெளியானது.

படத்தில் டைட்டில் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த மோஷன் பொஸ்டரில் வழக்கத்திற்கு மாறாக ரஜினியின் பெயர் வேறு விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

பொதுவாக ரஜினி நடிக்கும் படங்களில் பெயர் போடும் போது SUPER STAR என்ற ஆங்கில வார்த்தையை ஒவ்வொரு எழுத்தாக நீல நிறத்தில் வடிவமைத்து இருப்பார்கள்.

ஆனால் அண்ணாத்த மோஷன் போஸ்டரில் கருப்பு, வெள்ளை, காவி நிறத்தில் நட்சத்திரமும் அதன் மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று வருவது போலவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதை பார்த்த பலர், ஒருவேலை இதுதான் ரஜினிகாந்த்தின் கட்சிக் கொடியாக இருக்குமே என்று கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் ஏப்ரல் 14-ம் தேதி கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அதுவரை காத்திருப்போம்.

Continue Reading

தமிழ்நாடு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் தகுதி எடப்பாடி அரசுக்கு உண்டா?

Published

on

பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள தமிழக அரசு எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இனி ஆண்டுதோறும் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிறந்த, பிப்ரவரி 24ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கடந்த வாரம் அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பினால் மட்டும் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்களா? பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கான சமுதாயம் அமைய அரசு செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் ஆண்ட்ரு பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்தாத தமிழக அரசு பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த அறிவிப்பினால் எந்த ஒரு பயனும் இல்லை என்ற நிலையே உள்ளது.

ஒரு பெண் குழந்தையின் பிறப்பு முதல் உணவு, கல்வி, பாதுகாப்பான சூழல் மற்றும் ஆளுமை திறன் ஆகியவை கிடைக்கும் போதுதான் அந்த பெண் குழந்தை பாதுகாக்கப்பட்ட பெண் குழந்தையாக கருதப்படும். அதுமட்டுமின்றி இன்றைய கல்வி சூழலில் பெண் குழந்தைகளின் ஆளுமை திறனை மேம்படுத்த தவறியதோடு மதிப்பெண்களை குறிக்கோளாக வைத்து செயல்படுவதால், பெண் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நவீன வசதிகள் பொருந்திய ஆய்வகங்கள் தமிழகத்தில் போதிய அளவு இல்லை, இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடும் வாய்ப்புகள் உள்ளது.

பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டு தரமான கல்வியை பயின்று பாதுகாப்பான சுற்றுச் சூழலில் வளர்ந்த, ஆளுமை திறன் கொண்டு செயல்பட்டால் ஆரோக்கியமான சமுதாயம் அமையும்.

ஆகையால், அவர்களுக்குத் தேவையான சத்தான உணவு, கல்வி, பாதுகாப்பு இவை அனைத்தையும் உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசு பாதுகாப்பு தினம் என அறிவித்தால் மட்டும் போதாது, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் மூலம் இவற்றை பின்பற்றினாலே பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது; மத்திய அரசு திட்டவட்டம்!

Published

on

என்ஆர்சி, சிஏபி, சிஏஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத் திருத்தங்களைச் செய்ததிலிருந்து, தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசும், மத்திய அரசிடம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

ஆனால், இன்று புதுவை எம்பி கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், “இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
வேலை வாய்ப்பு3 hours ago

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

வேலை வாய்ப்பு3 hours ago

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!நாளைக்கு கடைசி நாள்

வீடியோ செய்திகள்3 hours ago

ஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு

வீடியோ செய்திகள்4 hours ago

நித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி…! கண்களை கட்டி கலக்கும் மாணவி

வீடியோ செய்திகள்4 hours ago

கட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு

வீடியோ செய்திகள்4 hours ago

டான்ஸ் ஆடி மெலனியா டிரம்ப் கவனத்தை ஈர்த்த சிறுவன்

வீடியோ செய்திகள்4 hours ago

மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..!

வீடியோ செய்திகள்4 hours ago

வீர தமிழச்சி! இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்! கண் கலங்கிய பிரபலங்கள்

வீடியோ செய்திகள்4 hours ago

வாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு

வீடியோ செய்திகள்5 hours ago

டிரம்ப்புக்கு ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி

வேலை வாய்ப்பு4 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்3 hours ago

ஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு

வீடியோ செய்திகள்4 hours ago

நித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி…! கண்களை கட்டி கலக்கும் மாணவி

வீடியோ செய்திகள்4 hours ago

கட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு

வீடியோ செய்திகள்4 hours ago

டான்ஸ் ஆடி மெலனியா டிரம்ப் கவனத்தை ஈர்த்த சிறுவன்

வீடியோ செய்திகள்4 hours ago

மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..!

வீடியோ செய்திகள்4 hours ago

வீர தமிழச்சி! இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்! கண் கலங்கிய பிரபலங்கள்

வீடியோ செய்திகள்4 hours ago

வாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு

வீடியோ செய்திகள்5 hours ago

டிரம்ப்புக்கு ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி

வீடியோ செய்திகள்5 hours ago

கொஞ்சம் காதலன் , கொஞ்சம் காதலி மொத்தம் கௌதம் மேனன்

வீடியோ செய்திகள்5 hours ago

மெலனியாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அரசுப்பள்ளி சிறுமிகள்!

Trending