தமிழ்நாடு
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் தற்போதுதான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என அவரது கட்சியின் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு
புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு


இந்திய தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டுவந்த சுனில் அரோரா அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுசில் சந்திரா என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் முடிவடைந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றுடன் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக யார் நியமன செய்யப்படுவார் என்ற பரபரப்பு இருந்தது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் சுசில் சந்திரா அவர்கள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி!


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தீவிரமாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்ட போதிலும் சக்கர நாற்காலியில் இருந்து அவர் பிரசாரம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அவர் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
முதல்வர் கூட்டிய சிறப்பு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது:
-
தமிழ்நாடு18 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
கிரிக்கெட்2 days ago
ஷிகர் தவான் அபார ஆட்டம்: சென்னை அணி தோல்வி!