தமிழ்நாடு
ஸ்டாலின் முதல்வரான பின் தான் சட்டசபை செல்வோம்: துரைமுருகன்


தமிழக சட்டமன்றத்தில் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் பட்ஜெட் உரையை படிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி கொண்டிருந்த நிலையில் ஒருகட்டத்தில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துரைமுருகனின் இந்த பேட்டிக்கு நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!


சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற நிலையில் அதற்கு முன்னரே தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இன்று காலை முதல் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அடுத்ததாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை இன்று பிற்பகலில் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்தால்தான் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற நிபந்தனை விதித்து இருந்ததாகவும் அந்த நிபந்தனையின் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது
சற்றுமுன் வந்த தகவலின்படி வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், அரசு பணி நியமனங்களில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு
“நான் கருணாநிதியை கிண்டல் செய்யலைங்க!” – கமல் சொல்லும் புது விளக்கம்!


அரசியல் வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கமல் பேசியது, தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியைப் பற்றித் தான் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு புறம், அவர் மாற்றத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நான் சர்க்கர நாற்காலியில் அமரும் நேரம் வரும் போது மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ எனப் பேசினார்.
உசுரோட இருக்கற வர ஒரு வார்த்தை பேச வக்கில்ல. நாட்ட விட்டு போறேன்னு மூக்க சிந்த வேண்டியது.
இப்ப இப்படி பேசறது @ikamalhaasan இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா?
— நிதன் பொற்கொடி (@SriniLeaks) February 25, 2021
இந்நிலையில் இன்று தாம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல், ‘முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். அந்த வயதில் எதுவும் செய்ய முடியாது என்பது தான் என்னுடைய கணிப்பு. அதே நேரத்தில் என்னுடைய முதுமை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
கருணாநிதியின் மேல் எனக்கு அதிக மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியைப் பற்றியும், என்னுடைய முதுமையைப் பற்றியும் தான் மேடையில் பேசினேன்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு
ஆளுனர் தமிழிசை எடுத்த அதிரடி நடவடிக்கை: புதுவையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையும் உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தொட்டுவிட்ட பெட்ரோல் டீசல் விலை விரைவில் தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வாட் வரி குறைப்பால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று தமிழகத்திலும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவீர்கள்… தளபதி 65 அப்டேட் கொடுத்த நெல்சன்!