தமிழ்நாடு
எஸ்.பி.வேலுமணியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்: திமுக சவால்!


உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.
திமுக தரப்பு தன் மீது ஊழல் குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நிலையில், டெல்லியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்துவிட்டால், அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன் எனவும். அப்படி குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியைத் துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியைத் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தான் செய்த ஊழலை மறைப்பதற்கு வேலுமணி ஏதேதோ காரணங்களைக் கூறுகிறார். நான் அவரை சவாலுக்கு அழைக்கிறேன். வேலுமணி மீது சுமத்தப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் எங்கு வரச்சொல்கிறாரோ, அந்த இடத்தில் ஆதாரங்களோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன் என்றும் சவால் விடுத்தார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 13 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் அதிகம்!


தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கு சற்றே குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 4 ஆயிரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12,652
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,37,711
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,789
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 59
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,317
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 7,526
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 934,966
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 113,144
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 212,79,542
தமிழ்நாடு
‘தடுப்பூசியை மாநில அரசு வாங்க நிதி எங்க இருக்கு மிஸ்டர் மோடி!’- பொறுப்பை உதறும் மத்திய அரசு; வறுத்தெடுத்த ஸ்டாலின்


கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி கொடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் “கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்கப்படும்” எனக் கூறியுள்ள சீரம் நிறுவனம் “மாநில அரசுகளுக்கான விலையை 400 ரூபாயாக உயர்த்தியிருப்பது” மிகுந்த கவலையளிப்பதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.
“மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம்” என்று இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்து, மே 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் “வெளிப்படையான முறையில் விலையை அறிவிக்க வேண்டும்” என்று அறிவுறுத்திய பிறகும், இவ்வாறு கடுமையான விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல – கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் ஆபத்து மிகுந்ததாக இருக்கிறது.
“மே 1-ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்” எனப் பிரதமர் அறிவித்துள்ளார். “தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் 50 விழுக்காடு தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்றும் – மீதியுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கலாம்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளுக்கு அந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே 4,500 கோடி ரூபாயை மத்திய அரசு இப்போது செலுத்துகிறது. ஆனால் மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்? மத்திய அரசு அறிவித்துள்ள “அனைவருக்கும் தடுப்பூசி” என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்? மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசியை விற்பனை செய்ய முன்வரும் அந்தத் தயாரிப்பு நிறுவனம் – மாநில அரசுகளுக்கு மட்டும் 400 ரூபாயாக விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியே இன்னும் நிலுவையில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு கேட்ட நிதியையும் இதுவரை முழுமையாக மத்திய அரசு வழங்கிடவில்லை. ஏற்கனவே மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில் தமிழ்நாடோ அல்லது பிற மாநிலங்களோ தடுப்பூசி விலை ஏற்றத்தின் சுமையை எப்படித் தாங்க இயலும்?
எனவே “அனைவருக்கும் தடுப்பூசி” என்ற அறிவிப்பைத் தமிழகத்தில் செயல்படுத்தி – தமிழக மக்களைப் பாதுகாத்திட, தடுப்பூசியின் விலை ஏற்றத்தை முதலில் உடனடியாகத் தடுத்திட வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு அளிக்கும் விலைக்கே தமிழக அரசுக்கும் தடுப்பூசிகளை விற்பனை செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி – மற்ற மாநிலங்களும், இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படும்.
எனவே, அனைத்து மாநிலங்களுக்குமே மத்திய அரசுக்கு விற்பனை செய்யும் விலையான தடுப்பூசி ஒன்றிற்கு 150 ரூபாய் என்ற விலைக்கே சப்ளை செய்திட தடுப்பூசி நிறுவனங்களை அழைத்துப் பேசிட வேண்டும் எனவும், அதற்குரிய கூடுதல் நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாடு
மே 2ல் வாக்குப்பதிவு: திடீரென தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார்!


தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது
வாக்குகளை எண்ணும் பணிகளில் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருக்கும் நிலையில் சற்று முன் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளோம். அதாவது வாக்குகள் எண்ணும் நாளான மே இரண்டாம் தேதி மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
கிரிக்கெட்2 days ago
கடைசி ஓவர் வரை போராடிய மும்பை: டெல்லி அணி த்ரில் வெற்றி!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்