தமிழ்நாடு
வலுவடைந்த புரேவி புயல்; கரையை கடப்பது எப்போது?


தென் கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள புரேவி புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1040 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும்.
டிசம்பர் 2-ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் புயல் கரையைக் கடக்கும்.
பின்னர் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு நகரும் புயலால், டிசம்பர் 3-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென் காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் வங்கக் கடலில் உருவான நிவர் புயல், சென்னை – புதுவை இடையில் மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீடு.. இலவசங்களை வாரி வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!


தமிழகத்தில் வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.
மேலும் சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ இடையிலான மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என்றும், தமிழகத்தில் ஏழை மக்கள் இல்லாத நிலையை உருவாக்க அதிமுக அரசு போராடி வருகிறது.
தமிழகத்தில் வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ரூ.2,500 பொங்கல் பரிசு உட்படப் பல இலவசத் திட்டங்களைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
‘திமுக கூட்டணியில் கமல்..!’- என்ன சொல்ல வராப்ல கார்த்தி சிதம்பரம்


கமலின் பெரும்பான்மையாக கருத்துகள் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகவும், எனவே அவர் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்.
‘கமல் சொல்லும் பெரும்பான்மையான கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளோடு ஒத்துப் போகின்றன. அவர் சுதந்திர கருத்தை காங்கிரஸ் போலவே முன் வைக்கிறார். காங்கிரஸின் மதச்சார்பின்மையைப் பேசுகிறார். இப்படி அவர் சொல்லும் பெரும்பான்மையான கருத்துகள் காங்கிரஸ் சொல்வது தான். இந்த காரணத்தினால் அவர் காங்கிரஸோடு கூட்டணி வைக்க வேண்டும். காங்கிரஸ் தற்போது திமுகவோடு கூட்டணியில் இருப்பதால், இந்தக் கூட்டணிக்கு கமல் வந்தால், நிச்சயம் அரசியல் மாற்றம் வரும்’ என்று பேசியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
மேலும் அவர், ‘நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகப்படியான, அதிக சதவீத வாக்குகள் கிடைக்காது. ஒரு கட்சியைப் பிடிக்கவில்லை என்பதனால் அவர்களுக்கு ஒரு சாரார் ஓட்டு போடலாம். ஆனால், அதனால் பெரும் மாற்றங்கள் நிகழாது’ என்றுள்ளார்.
தமிழ்நாடு
30 தொகுதிகளை திமுக பிடிக்கும்… இல்லையேல் தற்கொலை செய்வேன்- ஜெகத்ரட்சகன் ஆவேச பேட்டி


புதுச்சேரியில் திமுக 30 தொகுதிகளிலாவது வெற்றி பெறச் செய்வேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசி உள்ளார்.
திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் புதுச்சேரியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பிரசாரப் பணிகளை புதுச்சேரியில் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார் ஜெகத்ரட்சகன். தொடர்ந்து பல கூட்டங்களில் பங்கேற்று பேசி வருபவர் மேடை ஒன்றில் பேசுகையில், “புதுச்சேரி பூமி சொர்க்க பூமியாக விளங்கி வந்தது. தற்போது நகரமயமாதலால் அதிகப்படியாகவே மாறிவிட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல வித முயற்சிகள் தடைபட்டு உள்ளன. பல்வேறு கட்ட கட்டமைப்புகளும் முடங்கி உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப் படவில்லை. புதுச்சேரியில் திமுக அதிக இடங்களில் வென்றால் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். புதுச்சேரியில் திமுக-வை நிச்சயமாக 30 இடங்களில் வெற்றி பெறச் செய்ய வைப்பேன். இல்லையேல் மேடையிலேயே நான் தற்கொலை செய்து கொள்வேன்” என ஆவேசமுடன் பேசி உள்ளார்.
புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் பேசியது காங்கிரஸ்- திமுக இடையே ஏற்பட்டுள்ள விரிசல் ஆகத் தெரிவதாக என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றன.