தமிழ்நாடு
யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை! மீறினால் கைது நடவடிக்கை!!


ஆபாசமாக, அருவருக்கத்தக்க வீடியோக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் வைத்திருப்பவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது இணைய வசதி பெருகி விட்ட நிலையில், பிரபலமாவதற்காக ஒருசிலர் இதுபோன்று ஆபாச வீடியோக்களை பதிவேற்றுவதும், அதன்மூலமாக காசு சம்பாதிப்பதும் தொழிலாக வைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த ஒரு யூடியூப் சேனல் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஆபாசமாக, அருவருக்கத்தக்க வீடியோக்களை பதிவிட்டுள்ள யூடியூப் சேனல்கள், அதுபோன்ற வீடியோக்களை நீக்கும்படி சென்னை காவல்ஆணையர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி யாராவது ஆபாசமான வீடியோக்களை வைத்திருந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தியா
ரூ.100, ரூ.10, ரூ.5 பழைய ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது? – ரிசர்வ் வங்கி விளக்கம்


இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்தாண்டு புதிய 100 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பழைய 5,10, 100 ரூபாய் நோட்டுகள் மார்ச், ஏப்ரல் மாதத்திலிருந்து செல்லாது என்றும் அதன்பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் இருக்காது என்றும் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இது செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில், பழைய வரிசை கொண்ட ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் செல்லத்தக்கது என்று என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே 10 ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என்று கூறி வந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கிக் கொள்ளால், பயன்படுத்தாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
“அவர மதுர பக்கம் வரச் சொல்லுங்கப்பா..!”- ஸ்டாலினை எச்சரித்த செல்லூர் ராஜூ


ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் இந்த முறை சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை பக்கம் வந்து போட்டியிடச் சொல்லுங்கள் என்று சவால் விட்டுள்ளார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.
திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் பொதுக் கூட்டங்களில் பேசி வரும் ஸ்டாலின், ‘நான் செல்லும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் அதிமுகவுக்கு எதிரான அலை அதிகமாக வீசுகிறது. மக்கள் அதிமுக மீதும், அதிமுக அரசு மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்களின் தொகுதிகளில் தான் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறது. அமைச்சர்கள் மீது தான் மக்கள் அதிக அதிருப்தியில் இருக்கின்றனர்.
எனவே அதிமுக அமைச்சர்கள் நிற்கும் சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவினர் போட்டியிடுவார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் அமைச்சர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்களே களமிறக்கப் படுவார்கள்’ என்று அதிரடியாக பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள செல்லூர் ராஜூ, ‘தமிழகத்தில் மக்கள் அனைவரும் செழிப்பாக உள்ளார்கள். எப்போது தேர்தல் வரும், எப்போது இரட்டை இலைக்கு வாக்கு செலுத்தலாம் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் மனது இப்படி இருக்கையில் திமுக ஆட்சிக்கு வருவதைப் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.
எங்கள் கட்சி அமைச்சர்களை எதிர்த்துத் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதைத் தான் நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். திமுக வேட்பாளர் கூட அல்ல, ஸ்டாலினே எங்களை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் சென்னைப் பக்கமே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தென் மாவட்டம் பக்கம் வர வேண்டும். குறிப்பாக மதுரை பக்கம் வர வேண்டும். அவரை நீங்களாவது மதுரை பக்கம் வந்து, இங்கிருக்கும் தொகுதிகளில் போட்டியிடும் படி சொல்லுங்கள்’ என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு
ஒருபுறம் 200 பேருக்கு திருமணம், மறுபுறம் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. துடிதுடித்த கர்ப்பிணி!


கடலூரில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு திருமண நிகழ்ச்சி நடந்த போது, போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத ஸ்வாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200 திருமணம் நடைபெற்றது. இதற்காக 200 பேரினுடைய குடும்பங்களும் அவர்களை வாழ்த்த அப்பகுதியில் குவிந்தனர். வாகனம் நிறுத்த முடியாத அளவில் இருந்தது, இதனால் அப்பகுதி இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசலாக இருந்தது.
இந்நிலையில் இன்று 11 மணியவளில் அந்த வழியாக 108 வாகனம் சென்ற போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. கர்ப்பணியுடன் சென்ற அந்த ஆம்புலன்ஸ் ஒரு அடி கூட நகர முடியாத அளவில் இக்கட்டான சூழலுக்கு உள்ளானதால், வேறு வழி வாகனத்தில் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். பின்னர், மீண்டும் கடலூருக்கே ஆம்புலன்ஸ் திரும்பியது.
-
சினிமா செய்திகள்1 day ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!