Connect with us

தமிழ்நாடு

சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்குப் பதிவு!

Published

on

தீபாவளியின் போது, சென்னையில் தமிழக அரசு விதித்திருந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக 2019-ம் ஆண்டு முதல் தீபாவளியின் போது நேரக்கட்டுப்பாட்டை அறிவித்து வருகிறது தமிழக அரசு.

எனவே இந்தாண்டு தீபாவளியின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். இல்லை என்றால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் இந்த நேரக்கட்டுப் பாடு மற்றும் காவல் துறையின் எச்சரிக்கையை மீறி, தீபாவளியின் போது 348 நபர்கள் பட்டாசு வெடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட சென்னை மண்டலத்திலிருந்து மட்டும் 82 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே பொன்று சென்னையின் கிழக்கு, மேற்கு, தெற்கு பதிகளிலும் 80 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை மீறுதல், அஜாக்கரதியாக பட்டாசு வெடித்தது போன்ற வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட ரயில்.. பயணிகள் அவதி!

Published

on

நிவர் புயல் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் பல்லவன் ரயிலில் பயணிக்கு நேற்று வரை டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளது. எனவே டிக்கெட் பெற்ற பயணிகள் இன்று அதிகாலை ரயில் நிலையம் வந்து பார்த்தால், ரயில் நிலையத்தில் யாருமில்லை.

மேலும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறக் கூட ஆள் இல்லாத நிலையில், வழக்கம் போல் அதிகாலையில் ரயில் நிலயம் வந்த பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாகப் பல்லவன் ரயில் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், அதுகுறித்த தகவலைப் பயணிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பித் தெரிவித்து இருக்க வேண்டும்.

ஆனால் ரயில் ரத்து குறித்த எந்த தகவலும் வரவில்லை என்று காரைக்குடியில் அவதிக்குள்ளான பயணிகள் கூறுகின்றனர்.

Continue Reading

தமிழ்நாடு

நிவர் புயல் எதிரொலி.. சாலைகளில் உள்ள தடுப்பு பதாகைகள் நீக்க உத்தரவு!

Published

on

நிவர் புயல் எதிரொலியாகச் சாலைகளில் உள்ள விளம்பர பதாகைகளை நீக்கச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் மும்பையில் ஏற்பட்ட புயலின் போது சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த பாதாகைகள் கீழே விழுந்து பல விபத்துகளை ஏற்படுத்தி இருந்தது.

அதுபோல ஒரு சூழல் சென்னையில் நடைபெற்றுவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி, அடுத்த 2 மணி நேரத்தில் சாலைகளில் உள்ள அணைத்து பதாகைகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதால், அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் 2000 குடும்பங்களை, நிவாரண முகாம்களுக்கு மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

சென்னை மட்டுமல்லாமல் கடலோர மாவட்டங்களில் சாலைகளில் உள்ள பதாகைகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Continue Reading

தமிழ்நாடு

நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தகவல்!

Published

on

சென்னையில் பெய்து வரும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளாவான 24 அடியை எட்டி வருகிறது.

எனவே செம்பரம்பாக்கம் ஏரி இரவு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதால் சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் மக்களுக்குத் தேவையில்லை. 2015-ம் ஆண்டு ஏரியைத் திறக்க தாமதமாக எடுத்த முடிவால்தான் வெள்ளம் ஏற்பட்டது.

தற்போது அப்படியில்லை, தீவிர கனமழை பெய்யும் முன்பே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களை, வெள்ள நிவாரன முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 350 குடும்பங்கள் நிவாரன முகம்களுக்கு அனுப்பட்டுள்ளன. மொத்தம் 2000 குடும்பங்களை முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Continue Reading




வேலை வாய்ப்பு11 mins ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்15 mins ago

தளபதி 65… அந்த படத்தின் இரண்டாம் பாகமா? குஷியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு41 mins ago

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு44 mins ago

இந்திய ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு48 mins ago

அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட ரயில்.. பயணிகள் அவதி!

சினிமா செய்திகள்1 hour ago

12 வருடத்திற்குப் பிறகு ஒன்று சேர்ந்த சூர்யா, கவுதம் மேனன்.. என்ன படம் தெரியுமா?

சினிமா செய்திகள்2 hours ago

படுகவர்ச்சியான குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.. அதிர்ச்சியில் குடும்பம்!

வேலை வாய்ப்பு2 hours ago

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 hours ago

உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதலிடம் யார்?

வேலை வாய்ப்பு3 hours ago

தேசிய தொழில்நுட்ப ஜவுளி துறையில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: