தமிழ்நாடு
சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி!


ஊரடங்கு முடிந்த பிறகு சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எம்டிசி பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 25 பயணிகளுடன் ஒரு பேருந்தை இயக்கலாம். ஆனால் கூட்டம் நிறைந்த பேருந்து நிலையங்களில் பயணிகளை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்று பேருந்து நடத்துநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சிறப்பு பயணிகள் ரயில் சேவையை மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் இதுவரை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளை தொடங்குவது குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடவில்லை.
சென்னை போன்று சிவப்பு மண்டலங்கள் இல்லாத ஊர்களில் ஆட்டோவில் ஒரு பயணிகளை மட்டும் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சிறிது போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் ஷேர் ஆட்டோக்கள் குறித்த முடிவை இதுவரை எடுக்கவில்லை.
பேருந்து, மெட்ரோ சேவைகளை தொடங்கினாலும், முதலில் குறையாவன வாகனங்களும், தேவை பொருத்து அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நமக்குக் கிடைத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, மே 17-ம் தேதியுடன் ஊரடங்கு முடிந்த பிறகு பொது போக்குவரத்தைத் தொடங்க வாய்ப்புகள் இருந்தாலும் அதில் சரியான தெளிவு இல்லை என்று மட்டும் தெரிகிறது.
தமிழ்நாடு
யாருக்கும் அடிமை இல்லை, யாரும் அடிமை இல்லை: முதல்வர் பழனிசாமி பஞ்ச்


ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை இரண்டாக பிரிக்க நினைத்தார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ பதவி என்பது தோளில் போட்டிருக்கின்ற துண்டு போன்றது என்று அறிஞர் அண்ணா கூறினார். அவர் கூறியது போல், என்னை யாரும் விலை வாங்கவோ, அடிப்படுத்தவோ முடியாது. அதே போல் மதம், சாதி என்ற பெயரில் நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை.
எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அதிமுக அரசு அவர்களுடைய உடமையை பாதுகாக்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன். அப்படி இருந்து தான் சேவையாற்றி வருகிறேன். இஸ்லாமிய பெண்கள் அதிமுக ஆட்சியில் அதிக அளவில் படிக்கின்றனர். மத்திய அரசு ஹஜ் பயணத்திற்கான நிதியை ரத்து செய்த போதிலும், அதனை ஈடு செய்யும் விதமாக, இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்குகிறது. தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை உருவாக்குவோம்’ இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
தமிழ்நாடு
சசிகாலா தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!


சசிகாலா தொடர்ந்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெயரில் சசிகாலா, பெங்களூருவில் உள்ள பார்ப்பன அக்ரஹார சிறையில் 2017-ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.
அந்த வழக்கில் தொடர்புடைய இளவரசிக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் சசிகலா விடுதலை ஆகிவிடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் திடீர் உடல நலக்குறைவால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, 2 தினம் முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அவரை தொடர்ந்து அவருடன் சிறையில் தொடர்பிலிருந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே இருவரும் 7 நாட்கள் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் அளிக்கப்பட உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இளவரசியும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கு பிறகு இருவரும் சிறைக்குச் செல்லாமல், நேரடியாக விடுதலையாகி சென்னை திரும்ப அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பார்ப்பன அக்ரஹார சிறையில் உள்ள பிற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
செய்திகள்
அதிமுகவை உடைக்க முயன்றாரா மு.க.ஸ்டாலின்?


வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோவை உள்ள ராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அங்குள்ள மக்களிடையே எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்திற்காக மேம்பாலம், கிராமங்களில் ஏழைகளுக்கு என மினி கிளினிக் என பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கினோம்.
ஜெயலலிதா மறைந்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார். ஆனால் நாங்கள் தொண்டர்களின் உதவியுடன் அதனை முறியடித்து ஆட்சியை தொடர்ந்து வருகிறோம். நான் முதலமைச்சராக பதவியேற்றபோது இன்னும் 1 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். 6 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும் என கூறி வந்தார். ஆனால் நான் பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டேன் என்பதை உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.
கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் கஷ்டத்தை போக்கவே பொங்கல் பண்டிகையின் போது ரூ.2500 வழங்கினோம். ஆனால் அதனை கூட தடுக்க தி.மு.க முயற்சித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
வேலைவாய்ப்பு2 days ago
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!
-
விமர்சனம்2 days ago
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்
-
வேலைவாய்ப்பு2 days ago
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!