தமிழ்நாடு
கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் அத்தி வரதர் கனவில் வந்து அழுததாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியுள்ளார்.
அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கூட்ட நெரிசலால் இதுவரை 8 பேர் உரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிலர் விவிஐபி பாஸ் மூலம் மிகவும் வசதியாக வந்து பார்த்து செல்கின்றனர். இது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, இதே அத்திவரத பெருமாள் ஸ்ரீகிருஷ்ணபிரேமி அன்னா சுவாமிகளிடம் உற்சவம் ஆரம்பித்த புதிதில் மறுபடியும் என்னைச் சேற்றில் புதைக்கப் போகிறாயா? என்னைப் புதைக்க வேண்டாம் என்று அவருடைய கனவில் தோன்றி அழுததாக கிருஷ்ணபிரேமி அன்னா கண்ணீருடன் கூறினார் என்னிடம்.
இதை நாங்கள் தமிழக முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் அறநிலையத்துறை அமைச்சரிடமும் மற்றும் அனைத்து அமைச்சர்களிடமும் நமது நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக ஸ்ரீகிருஷ்ணபிரேமி அன்னா அவர்களின் முடிவைக் கூறியுள்ளோம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
சசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே!!!


இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் கம்-பேக் கொடுப்பாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்குத் தலைமை ஏற்ற சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆனார். தொடர்ந்து தமிழக முதல்வராக பதவியேற்க திட்டம் போட்டார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறைத் தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார் சசிகலா.
இது குறித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடியார், ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.
தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்காவது தெரியுமா? ஸ்டாலின் கேள்வி


ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று திமுக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு தான் இருந்தது. அண்ணா புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் எப்படி இறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதே போல் எம்ஜிஆருடைய மரணமும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. சும்மா இட்லி சாப்பிட்டார்கள், டிவி பார்த்தார்கள் என்று தான் சொல்லி வருகிறார்கள். சாதாரணமாக ஒரு துக்க வீட்டிற்கு சென்றாலே, இறந்தவர் எப்படி இறந்தார், என்ன ஆச்சு என்று கேட்கிறோம்.
ஒரு சாமானியரின் மரணமே நாம் தெரிந்துகொள்கிறோம். உற்றார் உறவினர்களும் சொல்லி விடுகிறார்கள். ஆனால், ஒரு மாநிலத்திற்கே முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது’ இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு
பொங்கல் பரிசு எல்லோருக்கும் கிடைத்ததற்கு நான் தான் காரணம்: செல்லூர் ராஜூ அடம்


பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘எம்ஜிஆர் பணத்திற்காக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். நடித்த எல்லா படங்களிலும் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டியவர் எம்ஜிஆர்.
ஆனால் இப்போது எல்லாம் வெறும் 4 நாள் படம் ஓடினாலே போதும். தலைவா நீ தான் முதல்வர் என்று போஸ்டர் ஒட்டி விடுகின்றனர். திமுகவை வளர்த்துவிட்டவர் அண்ணா தான். ஆனால், திமுக பேனர், விளம்பரத்தில் அண்ணா படமே இருக்காது. முழுக்க கருணாநிதியின் குடும்ப படமே உள்ளது.
மதுரை சிறப்பாக வர வேண்டும் என்று எந்நாளும் நினைத்துக்கொண்டிருப்பவன் நான். பொங்கல் பரிசு மக்கள் அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம்’.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.