தமிழ்நாடு
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கேட்டு அப்பல்லோ மனு தாக்கல்!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகத்தினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்டு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அரசு சாராத மருத்துவர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது அப்பல்லோ. இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ்நாடு
80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் உணவு தானியங்கள்: பிரதமர் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்துள்ளதாகவும் வருமானம் இன்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சற்று முன்னர் பிரதமர் மோடி அவர்கள் நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு மே, ஜூன் மாதம் ஆகிய இரண்டு மாதங்களும் இலவசமாக 5 கிலோ தானியங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவையடுத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் இலவசமாக உணவு தானியங்கள். கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மே&ஜூன் மாதங்களில் இவ்வுதவியை மக்கள் பெறமுடியும். உடனடி நிவாரணமாக இந்த உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற கொரோனா பாதுகாப்புமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு
முதல்வரை திடீரென சந்தித்த தலைமை செயலாளர்: என்ன காரணம்?


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திடீரென சற்று முன்னதாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. நேற்றும் நேற்று முன்தினமும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் முதல்வரின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் நடந்த கூட்டம் குறித்து முதல்வரிடம் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிப்பார் என்றும் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழகத்தில் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு
ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி


கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்பாடு செய்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குதல், கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்தல் உள்பட பல்வேறு மக்கள் உயிரை காக்கும் பணிகள் இருக்கும் நிலையில் ரூபாய் 3408 கோடி மதிப்பில் மத்திய அரசு மூன்று தலைமை செயலகங்களை கட்டும் பணியில் தீவிரமாக உள்ளன.
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)
-
வணிகம்1 day ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!
-
கிரிக்கெட்2 days ago
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!