தமிழ்நாடு
ரத்தான தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


ரத்தான செமஸ்டர் தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு கல்லூரி செமஸ்ட்ர் தேர்வுகள் திவிற பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இருந்தாலும் அனைத்து மாணவர்களும் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அண்ணா பலகலைக்கழகம் அறிவித்து இருந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும், தேர்வுக்காக முன்கூட்டியே அண்ணா பல்கலைக்கழகம் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு இருந்தது. அதனால் 126.10 ரூபாய் வரை செலவாகியுள்ளது தெரிவித்தது.
மேலும் இந்த செமஸ்டர் தேர்வுக்கான மதிப்பு பட்டியலையும் அணைத்து மாணவர்களுக்கு வழங்கவும் செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. எனவே மாணவர்கள் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணத்தைத் திருப்பி வழங்கவும் முடியாது. அது தவறான உதாரணமாக மாறிவிடும் என்று தெரிவித்தது.
விசாரணையின் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டணம் உத்தரவு செல்லும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் அந்த கட்டணத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
‘திமுக கூட்டணியில் கமல்..!’- என்ன சொல்ல வராப்ல கார்த்தி சிதம்பரம்


கமலின் பெரும்பான்மையாக கருத்துகள் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகவும், எனவே அவர் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்.
‘கமல் சொல்லும் பெரும்பான்மையான கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளோடு ஒத்துப் போகின்றன. அவர் சுதந்திர கருத்தை காங்கிரஸ் போலவே முன் வைக்கிறார். காங்கிரஸின் மதச்சார்பின்மையைப் பேசுகிறார். இப்படி அவர் சொல்லும் பெரும்பான்மையான கருத்துகள் காங்கிரஸ் சொல்வது தான். இந்த காரணத்தினால் அவர் காங்கிரஸோடு கூட்டணி வைக்க வேண்டும். காங்கிரஸ் தற்போது திமுகவோடு கூட்டணியில் இருப்பதால், இந்தக் கூட்டணிக்கு கமல் வந்தால், நிச்சயம் அரசியல் மாற்றம் வரும்’ என்று பேசியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
மேலும் அவர், ‘நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகப்படியான, அதிக சதவீத வாக்குகள் கிடைக்காது. ஒரு கட்சியைப் பிடிக்கவில்லை என்பதனால் அவர்களுக்கு ஒரு சாரார் ஓட்டு போடலாம். ஆனால், அதனால் பெரும் மாற்றங்கள் நிகழாது’ என்றுள்ளார்.
தமிழ்நாடு
30 தொகுதிகளை திமுக பிடிக்கும்… இல்லையேல் தற்கொலை செய்வேன்- ஜெகத்ரட்சகன் ஆவேச பேட்டி


புதுச்சேரியில் திமுக 30 தொகுதிகளிலாவது வெற்றி பெறச் செய்வேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசி உள்ளார்.
திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் புதுச்சேரியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பிரசாரப் பணிகளை புதுச்சேரியில் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார் ஜெகத்ரட்சகன். தொடர்ந்து பல கூட்டங்களில் பங்கேற்று பேசி வருபவர் மேடை ஒன்றில் பேசுகையில், “புதுச்சேரி பூமி சொர்க்க பூமியாக விளங்கி வந்தது. தற்போது நகரமயமாதலால் அதிகப்படியாகவே மாறிவிட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல வித முயற்சிகள் தடைபட்டு உள்ளன. பல்வேறு கட்ட கட்டமைப்புகளும் முடங்கி உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப் படவில்லை. புதுச்சேரியில் திமுக அதிக இடங்களில் வென்றால் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். புதுச்சேரியில் திமுக-வை நிச்சயமாக 30 இடங்களில் வெற்றி பெறச் செய்ய வைப்பேன். இல்லையேல் மேடையிலேயே நான் தற்கொலை செய்து கொள்வேன்” என ஆவேசமுடன் பேசி உள்ளார்.
புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் பேசியது காங்கிரஸ்- திமுக இடையே ஏற்பட்டுள்ள விரிசல் ஆகத் தெரிவதாக என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றன.
தமிழ்நாடு
நீதிபதிகளை விமர்சித்த ‘துக்ளக்’ குருமூர்த்தி.. நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல்!


நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 51 ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து துக்ளக் ஆசரியர் பேசியிருந்தார். அரசியல்வாதிகளால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், யார் காலையாவது, யார் மூலமாவது தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். ஊழல் செய்பவர்களை நீதிபதிகள் தண்டிப்பதில்லை. தகுதிவாய்ந்த நீதிபதிகள் வந்தால் இதுபோல் நடந்திருக்காது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் இது குறித்து வேதனை தெரிவித்தார். மேலும், நீதிபதிகளை களங்கப்படுத்தியதற்கு குரூமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குருமூர்த்தி பேசியதை மனுவாக அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தொடரப்பட்டது.