தமிழ்நாடு
ரத்தான தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


ரத்தான செமஸ்டர் தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு கல்லூரி செமஸ்ட்ர் தேர்வுகள் திவிற பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இருந்தாலும் அனைத்து மாணவர்களும் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அண்ணா பலகலைக்கழகம் அறிவித்து இருந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும், தேர்வுக்காக முன்கூட்டியே அண்ணா பல்கலைக்கழகம் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு இருந்தது. அதனால் 126.10 ரூபாய் வரை செலவாகியுள்ளது தெரிவித்தது.
மேலும் இந்த செமஸ்டர் தேர்வுக்கான மதிப்பு பட்டியலையும் அணைத்து மாணவர்களுக்கு வழங்கவும் செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. எனவே மாணவர்கள் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணத்தைத் திருப்பி வழங்கவும் முடியாது. அது தவறான உதாரணமாக மாறிவிடும் என்று தெரிவித்தது.
விசாரணையின் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டணம் உத்தரவு செல்லும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் அந்த கட்டணத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
30 தொகுதிகளை திமுக பிடிக்கும்… இல்லையேல் தற்கொலை செய்வேன்- ஜெகத்ரட்சகன் ஆவேச பேட்டி


புதுச்சேரியில் திமுக 30 தொகுதிகளிலாவது வெற்றி பெறச் செய்வேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசி உள்ளார்.
திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் புதுச்சேரியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பிரசாரப் பணிகளை புதுச்சேரியில் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார் ஜெகத்ரட்சகன். தொடர்ந்து பல கூட்டங்களில் பங்கேற்று பேசி வருபவர் மேடை ஒன்றில் பேசுகையில், “புதுச்சேரி பூமி சொர்க்க பூமியாக விளங்கி வந்தது. தற்போது நகரமயமாதலால் அதிகப்படியாகவே மாறிவிட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல வித முயற்சிகள் தடைபட்டு உள்ளன. பல்வேறு கட்ட கட்டமைப்புகளும் முடங்கி உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப் படவில்லை. புதுச்சேரியில் திமுக அதிக இடங்களில் வென்றால் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். புதுச்சேரியில் திமுக-வை நிச்சயமாக 30 இடங்களில் வெற்றி பெறச் செய்ய வைப்பேன். இல்லையேல் மேடையிலேயே நான் தற்கொலை செய்து கொள்வேன்” என ஆவேசமுடன் பேசி உள்ளார்.
புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் பேசியது காங்கிரஸ்- திமுக இடையே ஏற்பட்டுள்ள விரிசல் ஆகத் தெரிவதாக என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றன.
தமிழ்நாடு
நீதிபதிகளை விமர்சித்த ‘துக்ளக்’ குருமூர்த்தி.. நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல்!


நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 51 ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து துக்ளக் ஆசரியர் பேசியிருந்தார். அரசியல்வாதிகளால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், யார் காலையாவது, யார் மூலமாவது தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். ஊழல் செய்பவர்களை நீதிபதிகள் தண்டிப்பதில்லை. தகுதிவாய்ந்த நீதிபதிகள் வந்தால் இதுபோல் நடந்திருக்காது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் இது குறித்து வேதனை தெரிவித்தார். மேலும், நீதிபதிகளை களங்கப்படுத்தியதற்கு குரூமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குருமூர்த்தி பேசியதை மனுவாக அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தொடரப்பட்டது.
தமிழ்நாடு
‘பேரறிவாளனுக்காக பிக்பாஸில் பேசியதற்கு கமல்ஹாசனுக்கு நன்றி’- அற்புதம்மாள் உருக்கம்


பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நிறைவுற்றது. இந்த நிறைவு விழாவில் கமல்ஹாசன் ஆற்றிய உரைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வார நாட்களில் நிகழ்ச்சியைக் காண்பதை விட வார இறுதி நாட்களில் கமல்ஹாசனின் வருகைக்காகக் காத்திருக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகம். வாராவாரம் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுப் பிரச்னைகளைத் தாண்டி தனது அரசியல் கருத்துகள், பன்ச் வசனங்கள் ஆகியவற்றையும் அவ்வபோது கமல்ஹாசன் தூவுவது வழக்கம். அதையும் தாண்டி அரசியல் பிரச்னைகள், நூல் பரிந்துரை ஆகியவற்றுக்கு தனி ரசிகர்கள் வட்டமே கமல்ஹாசனுக்கு உண்டு.
இந்த வகையில் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ன் இறுதி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலைத் தாண்டி அரசியலும் பேசினார் கமல்ஹாசன்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளனின் விடுதலைக்காக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினர். இது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது. இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், “குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை… ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை… பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை…
ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை…
பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!
🙏🏻#ReleasePerarivalan pic.twitter.com/aEiTqVPG0k— Arputham Ammal (@ArputhamAmmal) January 18, 2021