Connect with us

தமிழ்நாடு

மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி; பிரதமரை நாங்கள் தீர்மானிப்போம்: தினகரன் அதிரடி!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிரும் என்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நாங்கள் உருவெடுப்போம் எனவும் கூறியுள்ளார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமமுக மெகா கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த தினகரன், மெகா கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்து காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். தமிழக மக்களின் நலனுக்காக 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார்.

அதேப்போல அவருடைய வழியிலேயே தொண்டர்களாகிய நாங்கள் போட்டியிடுவோம். தேர்தல் முடிவில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது நமக்குத் தெரியும். எனவே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பர் என்றார் அதிரடியாக.

தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் அது கிடையாது.. அரசு அதிரடி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்காக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால், அவர்களும் இருக்கும் ஊரிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

அதாவது, தமிழகத்தில் இருக்கும் ஒருவர் வேறு மாநிலத்திற்கு வேலைக்குச் சென்று, அங்கேயே தங்கியிருந்தால், தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குச் சோதனை செய்து பார்த்ததில் வெற்றி பெற்றதன் மூலம், ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பதிப்பால் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவி வருகின்றன.

எனவே கொரோனா வைரஸ் பற்றி சாமானிய மக்களிடம் பரவி வரும் தகவல்களில் எது உண்மை என்று உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது.

வதந்தி உண்மை
வெப்பமான, ஈரப்பதமான இடத்தில் கொரோனா வைரஸ் பரவாது. வெப்பம் அதிகமான பகுதிகள், ஈரப்பதம் உள்ள பகுதிகள் என எல்லா பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவும்.
குளீர் கொரோனாவை கொல்லும் குளிர்பிரதேசங்களையும் கொரோனா தாக்கியுள்ளது. சீனாவில் குளிர் காலத்தில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது.
வெந்நீரில் குளிப்பது கொரோனாவை கொல்லும். அதிக சூடு, தோலைப் பாதிக்கும். கொரோனாவை தடுக்காது.
கொசு மூலம் கொரோனா பரவும் கொசுவால் கொரோனா வைரஸ் பரவாது. ர்ஹும்மல் இருமல் மூலமே பரவும்.
ஹேண்ட் ட்ரையர் கொரோனா வைரஸை கொல்லும் இல்லை,. ஹாண்ட் ட்ரையர் கைகளை உலர்த்த மட்டுமே உதவும். சோப்பு அல்லது கிருமி நாசினி போட்டு கைகளை கழுவதன் மூலம் தான் கொரோனாவை கொல்ல முடியும்.
அல்ட்ரா வைலட் லைட்களில் இருந்து பறவும் கதிர்கள் கொரோனா வைரஸை கொல்லும். இது கொரோனாவுக்கு எதிரானது அல்ல. உடலுக்கு தீங்கானது.
தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனாவை கண்டுபிடிக்கலாம். உடலின் வெப்ப நிலையை மட்டுமே அறிய முடியும்.
ஆல்கஹால், குளோரின் போன்றவற்றை உடலில் தெளித்துக்கொண்டால், கொரோனா பரவாது. இல்லை, ஆல்கஹால், குளோரின்ம் கிருமி நாசினி போன்றவற்றைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தமாகக் கழுவது மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க உதவும்.
நிமோனியா தடுப்பூசி கொரோனாவிலிருந்து காக்கும் கொரோனாவுக்கு இதுவரை எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை.
பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிக்காது. பூண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டுமே அதிகரிக்கும்.
வயதானவர்களை மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கும்.
ஆண்டிபயாக்டிக் மருந்துகள் கொரோனாவை எதிர்க்கும். கொரோனா ஒரு உயிர் இல்லாத வைரஸ். பாக்டிரியா தடுப்பு மருந்து உதவாது.
கொரோனாவை குணப்படுத்தத் தனி மருந்து கண்டுபிக்கப்பட்டுவிட்டது. இதுவரை அப்படி எந்த மருந்தும், கண்டுபிக்கப்படவில்லை.
Continue Reading

இந்தியா

கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

Published

on

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ் என்ற வங்கி கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வங்கி கணக்கிற்கு நேரடியாகவும், யூபிஐ மூலமாகவும், பிம், போன்பே, அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம், மோபிகுவிக் போன்ற சேவைகள் மூலமாக நிதியுதவி அளித்து, கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க பொது மக்களால் உதவி செய்ய முடியும்.

Image

தமிழக அரசுக்கு நேரடியாக உதவ வேண்டுமெனில் https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணைப்பிற்குச் செல்லவும்.

Image

Continue Reading
வேலை வாய்ப்பு5 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா9 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா7 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு8 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா9 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா1 year ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்1 year ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு8 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வீடியோ செய்திகள்2 weeks ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்2 weeks ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்2 weeks ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 weeks ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 weeks ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 weeks ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending