தமிழ்நாடு
‘தாமரை சேத்துலதான் வளருது… அங்கிட்டு போ..!’- கலாய்த்து தள்ளிய திருமா


தமிழகத்தைப் பொறுத்த வரையில் தாமரை சேற்றில் மட்டும் தன் வளர்கிறது என்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், ‘அதிமுக, தமிழர்களுக்கு ஒரு மிகப் பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறது. பாஜகவை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பதன் மூலம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது அதிமுக.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவா, அல்லது அதிமுகவா என்கிற நிலை இருக்கிறது. இதை மாற்றி திமுகவா அல்லது பாஜகவா என்கிற நிலைக்குக் கொண்டு வர பாரதிய ஜனதா துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த இடத்திற்கு பாஜகவை நகர்த்திக் கொண்டிருப்பது அதிமுகதான். இது தமிழகத்துக்கு அதிமுக செய்யும் மிகப் பெரிய துரோகம். இதன் மூலம் அதிமுகவே அழிந்து போகும்.
இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி உணருகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. அவரது எண்ணமெல்லாம், தற்போதைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் தான் உள்ளது’ என்று ஆவேசமாக பேசினார்.
தமிழ்நாடு
வருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி!


திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்த நிலையில் சற்று முன் இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Uncategorized
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்வி; பதில் சொல்ல தெரியாமல் திணறிய எல்.முருகன்!


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான காரணம் பற்றி விளக்க தெரியாமல் திணறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக எரிபொருட்களின் விலையேற்றம் குறித்து முருகன், ‘பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய விலைகளை 2013 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதையும், அப்போதிலிருந்து இப்போது வரை அதன் விலை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அனைத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே தான் இருக்கின்றது.
ROFL 😂😂😂👌#BJPfails pic.twitter.com/sKPr1ccLrs
— #BJPfails (@BJPFails_) March 6, 2021
2013 ஆம் ஆண்டு கேஸ் விலை 1000 ரூபாய்க்கு மேல் இருந்தது. தற்போது 700 ரூபாய் தான் உள்ளது. உலகின் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் விலை என்பது சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தான் இருக்கிறது. அதைப் போலவே இந்தியாவிலும் சர்வதேச சூழல்களைப் பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதார மந்த நிலை நிலவியது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உள்ளது.
அதேபோல இன்றைக்கு இந்தியாவுக்கு எண்ணெய் வர வேண்டும் என்றால் கப்பல் மூலமாகத் தான் வர வேண்டும். அப்படி வருவதற்கு லேட்டாவதும் ஒரு காரணமாகத் தான் இருக்கிறது’ என்று வினோதமான விளக்கத்தைக் கொடுத்தார்.
தமிழ்நாடு
தேர்தலில் போட்டியிடுவது உறுதி- அறிவித்தார் வேல்முருகன்!


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. களத்தில் மோதிக் கொள்ளும் இரண்டு பிரதான கட்சிகளான திமுக – அதிமுக இடையேயான கூட்டணி காய் நகர்த்தல்களும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
குறிப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் இரு கட்சிகளும் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இந்த முறை, 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளார். இது குறித்து அவர், ‘தொகுதிகளை கொடுக்கும் இடத்தில் பெரிய கட்சியாக இருப்பது திமுக. எனவே அந்தக் கட்சி எங்களுக்கு எவ்வளவு தொகுதி கொடுக்கும் என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன். நான் இந்த தேர்தலில் களமிறங்குவது உறுதி’ என்று கூறியுள்ளார்.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
Uncategorized2 days ago
ஓட்டுநர் உரிமம் பெற இனி RTOஅலுவலகம் செல்லத் தேவையில்லை!
-
கிரிக்கெட்2 days ago
4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வரும் இந்திய அணி: தனியாளாக போராடும் ரோஹித்!