தமிழ்நாடு
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?


நடிகர் விமல் மனைவி வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
நடிகர் விமலின் மனைவி அக்ஷயா வருகிற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். விமல்- அக்ஷயா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மருத்துவராகப் பணியாற்றும் அக்ஷயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விமல்.
கொரோனா காலகட்டத்தில் அக்ஷயா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் தொடர்ந்து மருத்துவப் பணிகள் செய்தது அன்றைய சூழலில் சமுக வலைதளங்களில் வைரல் ஆனது. அக்ஷயா தற்போது திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இன்று இது தொடர்பாக நடிகர் விமல், அவரது மனைவி அக்ஷயா ஆகிய இருவரும் திமுக அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர்.
அக்ஷயா விமல் திருச்சி மணப்பாறை தொகுதியில் எம்.எல்.ஏ ஆக போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முழு விவரம் பின்வருமாறு:
தமிழ்நாடு
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? சீமான் விளக்கம்


நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் உள்பட பலரும் விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
மேலும் ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்து இருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு
வேலூர் பட்டாசு கடையில் பயங்கர விபத்து: 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி


தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் உயிர் பலியும் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரில் பட்டாசு கடை உரிமையாளர் ஒருவர் என்பதும், அவரது இரண்டு பேரக்குழந்தைகள் என்பதும் மூவரும் பட்டாசு வெடி விபத்தில் ஏற்பட்ட தீயினால் உடல் கருகி உயிரிழந்தனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
இன்று தோனிக்கு ஒரு சிறப்பான மேட்ச்: எப்படி தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!