Connect with us

தமிழ்நாடு

டுவிட்டரில் வைரலாகும் #மன்னிப்புகேள்கமல்: என்ன காரணம்?

Published

on

Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்துக்கு எதிராக ஆவேசமடைந்த நெட்டிசன்கள் #மன்னிப்புகேள்கமல் என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கமலஹாசன் சமீபத்தில் தனது கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடினார். அப்போது அவர் பேசியபோது ’ஐந்து வருடங்கள் நான் முழுமையாக மக்களுக்காக சேவை செய்வேன். அதன் பின்னரும் 10 வருடங்கள் எனது உடல்நிலை நன்றாக இருக்கும் வரை சேவை செய்வேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று கூறினார்.

கமல்ஹாசன் கூறிய இந்த கருத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிடுவதாதாகவும் அவரது சேவையை கேலி செய்வது போன்றும் இருப்பதாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதுமை என்பது ஒரு குறை இல்லை என்றும் சக்கர நாற்காலி அசிங்கம் அல்ல என்றும் அந்த வயதிலும் அவர் எவ்வளவு சாதித்தார் என்பதே முக்கியம் என்றும் மக்கள் போற்றிய ஒரு தலைவனை மட்டுமின்றி சக்கர நாற்காலி பயன்படுத்தும் அத்தனை மக்களையும் கமல்ஹாசன் அசிங்கப்படுத்தி உள்ளதாகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து #மன்னிப்புகேள்கமல் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்: கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு

Published

on

By

தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுடைய கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இன்று காலை முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை ஆவின் பால் லிட்டருக்கு 3 குறைப்பு, கொரோனா நிவாரணத்தில் முதல் தவணையாக ரூ.2000 இம்மாதம் வழங்கப்படும் மற்றும் அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் ஆகிய 3 முத்தான திட்டங்களை சற்று முன் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மேலும் இரண்டு உத்தரவுகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்ததாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு செய்யப்படும் என்ற கோப்பிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த ஐந்து முத்தான அறிவிப்புகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அடுத்தடுத்து மேலும் சில அதிரடி அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

தமிழ்நாடு

பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, ரூ.2000 நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Published

on

By

தமிழக முதல்வராக இன்று காலை 9 மணிக்கு முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் முதன்முதலாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் பெரியார், அண்ணா, கருணாநிதி சமாதிகளில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் தலைமைச் செயலகத்துக்கு வந்து தனது பணியை தொடங்கினார்.

முதல்வராக பதவியேற்றதும் முக ஸ்டாலின் எந்தக் கோப்பில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மூன்று முக்கிய உத்தரவுகளுக்கு அவர் கையெழுத்திட்டுள்ளார். முதலாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக மே மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அடுத்ததாக ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மூன்றாவதாக நாளை முதல் நகரப் பேருந்துகளில் மகளிர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற கோப்பிலும் கையெழுத்திட்டுள்ளார். முதல் நாளே மூன்று முத்தான திட்டங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Continue Reading

தமிழ்நாடு

இந்த நேரத்தில் உங்கள் ஆட்சி நம்பிக்கை தருகிறது: முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

Published

on

By

இந்த பேரிடர் நேரத்தில் உங்கள் ஆட்சி மிகுந்த நம்பிக்கையை தருகிறது என இன்று முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வராக இன்று காலை 9 மணிக்கு முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன் நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்தப் பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சி அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்

தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Continue Reading
வேலைவாய்ப்பு32 mins ago

சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு38 mins ago

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்: கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு46 mins ago

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு54 mins ago

பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, ரூ.2000 நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சினிமா செய்திகள்1 hour ago

சிஎஸ்கே வீரருக்கும் உதவி செய்த நடிகர் சோனுசூட்! 10 நிமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆக்சிஜன்!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு2 hours ago

இந்த நேரத்தில் உங்கள் ஆட்சி நம்பிக்கை தருகிறது: முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

வேலைவாய்ப்பு2 hours ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

பாக்யராஜ் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: சாந்தனு அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு3 hours ago

நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending