Connect with us

தமிழ்நாடு

செல்ஃபியால் நேர்ந்த விபரீதம்-கதறி அழுத பெற்றோர்!

Published

on

காவிரி ஆற்றில் பெற்றோர் செல்ஃபி எடுத்த போது கையில் இருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் ஆற்று நீரை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தில் இருந்தபடி ஒரு பெற்றோர் காவிரியாற்றில் செல்ஃபி எடுத்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்தது.

இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் அலறி துடித்தனர். குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் செய்வதறியாது கதறிய சம்பவம் காண்போரை கலங்க செய்தது. பெற்றோரின் செல்பி ஆசையால் 4 வயது குழந்தை அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

பாலத்தின் நடுப்பகுதியில் நின்று அவர்கள் செல்ஃபி எடுத்ததால் குழந்தை ஆற்றின் நடுப்பதியில் விழுந்து அடித்து செல்லப்பட்டது. குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

.ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் ஓரம் நின்று செல்ஃபி எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பொருட்படுத்தாமல் செல்ஃபி எடுத்ததால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது என்றும் சிலரின் செல்ஃபி மோகத்தால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படுவதாகவும் அங்கு வந்த மக்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர்.

 

 

தமிழ்நாடு

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Published

on

சென்னை அம்பத்தூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்காக கொண்டு வரப்பட்டு இருந்த கேஸ் பலூன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் பாடியில், பாஜக விவசாயிகள் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் போது 2 ஆயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருந்தது.

பாடி சிவன்கோவில் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்து ராமன் பங்கேற்றார். அவரை வரவேற்று பட்டாசு வெடித்ததில், தீ பலூன் மீது விழுந்து வெடித்தது.

அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிறிய தீ காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்துக் காவல் துறையினர் செய்த விசாரணையில், அனுமதி இல்லாமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் கேஸ் பலூன் பறக்கத் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கேஸ் பலூனில் ஹீலியம் கேஸ் பதிலாக ஹைட்ரஜன் கேஸ் நிரப்பப்பட்டு இருந்திருக்கலாம். அதனால் தான் தீ பற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Continue Reading

இந்தியா

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து!

Published

on

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சர்வ வல்லமையுள்ள நம் பிரதமர் தேசத்திற்குச் சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்” என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

70வது பிறந்தநாளைக் கொண்டாடும், பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி உட்பட, பல்வேறு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

On the joyous occasion of our Hon’ble Prime Minister’s @narendramodi birthday, I convey my warm wishes for a wonderful year ahead.

I Pray that the Almighty may grant him many more years of good health and strength to serve our nation.

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 17, 2020

Continue Reading

சினிமா செய்திகள்

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!

Published

on

அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

இந்த மசோதா நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்குத் துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
பல்சுவை57 mins ago

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

பர்சனல் ஃபினாஸ்2 hours ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு2 hours ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு6 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்7 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்7 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)

வேலை வாய்ப்பு23 hours ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை23 hours ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு24 hours ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 hours ago

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: