Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் முதல்முறையாக 9 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தின் மொத்த பாதிப்பு ஒன்பது லட்சத்தை தாண்டி விட்டது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த முழு தகவலைப் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3672
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 903,479
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,335
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 11
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,789
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1842
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 866,913
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 79,442
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 196,85,598
Advertisement

தமிழ்நாடு

கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு

Published

on

By

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய் விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கொரோனா கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்து இருந்த தமிழக அரசு தமிழகத்தில் இரண்டாவது அலை கையை மீறிச் சென்று விட்டதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக மோசமாக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லை தாண்டி போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும் 40 வயதானவர்களும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி சென்று விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!

Published

on

By

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிவருகிறது என்பதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் மாணவர்களும் ஆல்பாஸ் என்ற உத்தரவை ஏற்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் அரியர் தேர்வுகளை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கல்வியின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த அறிவுரையை அடுத்து தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்துக்கு இன்று பதிலளித்த தமிழக அரசு அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் வரும் மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை அடுத்து அரியர் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பதட்டம்!

Published

on

By

ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் சித்திரை திருவிழா இன்னும் சில நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்றைய கொடியேற்ற விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடியேற்று விழாவிற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் போர்க்கொடி தூக்கியதால் மீனாட்சி அம்மன் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகிகள் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடைபெறும் என்றும் கோயில் வளாகத்திலேயே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மினாட்சி திருக்கல்யாண வைபவத்திற்கு மட்டும் பக்தர்கள் குறிப்பிட்ட அளவில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்ற வைபவங்கள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
தமிழ்நாடு47 mins ago

கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழ்நாடு59 mins ago

அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!

தமிழ்நாடு1 hour ago

கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பதட்டம்!

சினிமா செய்திகள்2 hours ago

’இந்தியன் 2’ வழக்கு: லைகா நிறுவனத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அனுமதி!

சினிமா செய்திகள்2 hours ago

ஒரே படத்தில் நடிக்க்கும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ்: இயக்குனர் இவர்தான்!

இந்தியா3 hours ago

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா4 hours ago

அதிகரிக்கும் கொரோனா: மேலும் ஒரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு!

தமிழ்நாடு5 hours ago

15 நாட்களுக்கு பின் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: தேர்தலுக்கு பின் உயருமா?

இந்தியா5 hours ago

இந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

சினிமா செய்திகள்6 hours ago

90-களின் இறுதியில்’ என திருத்துவதா? ‘கர்ணன்’ படக்குழுவினர்களுக்கு உதயநிதி அதிருப்தி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ3 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்3 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending