Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published

on

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு

‘நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன்…’- Zoho சிஇஓ ஶ்ரீதர் வேம்பு

Published

on

By

‘நேரடி அரசியலில் ஒரு நாளும் ஈடுபட மாட்டேன்’ என ஜோஹோ நிறுவனத்தில் சிஇஓ ஶ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

ஜோஹோ என்னும் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களை கிராமங்களிலும் நிறுவி இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர் ஶ்ரீதர் வேம்பு. இவருக்கு சமீபத்தில் தான் பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஊடகங்களில் தொழில், வேலைவாய்ப்பைத் தாண்டி அரசியல் கருத்துகளையும் முன் வைத்து வருகிறார் ஶ்ரீதர் வேம்பு.

இதனால் ஐடி துறையின் சிஇஓ ஒருவர் தமிழக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்ற செய்திகளும் உலவத் தொடங்கின. இதை மறுக்கும் வகையில் ஶ்ரீதர் வேம்பு விளக்கம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஶ்ரீதர் வேம்பு, “நான் ஒரு நாளும் நேரடி அரசியலில் ஈடுபடப் போவது இல்லை. இந்தியாவின் ஒரு கிராமத்தையாவது உலகத் தரம் வாய்ந்த பகுதியாக உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

அதற்காக மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து மக்களுடன் இணைந்து பயணிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழர் ஒரு சர்வதேச ஐடி நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கிறார் என்பதால் ஒருபுறம் கொண்டாடும் நெட்டிசன்கள் மறுபுறம் இவரது ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

செய்திகள்

ரஜினிக்கு டூப்பாக நான் இருக்க மாட்டேன்… கட்சி ஆரம்பிப்பேன்…

Published

on

பாஜகவிலிருந்து விலகி ரஜினி ஆரம்பிப்பதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற அர்ஜுன மூர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர். தனது அண்ணாநகர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இதை அறிவித்துள்ளார் அர்ஜுன மூர்த்தி…

 

கட்சி தொடங்கினாலும் தான் ரஜினிக்கு டூப்பாக இருக்க மாட்டேன், உங்கள் வீட்டில் நீங்கள் வைக்கும் சாம்பாருக்கும் உங்கள் அம்மா வைக்கும் சாம்பாருக்கும் வித்தியாசம் உண்டல்லவா அது போலத்தான் எனக்கும் ரஜினி அரசியலுக்கும் இருக்கும் என்றார் அர்ஜுன மூர்த்திர். மேலும், ஆட்டோவில் சென்று வேண்டுமானால் வாக்கு கேட்பேனே தவிர ஆட்டோ சின்னம் எல்லாம் கேட்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

 

நிறைய மாற்று சிந்தனைகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் அதை வழி நடத்தி செல்ல வேண்டியது யார் என்ற கேள்வி உள்ளது. ஏற்கெனவே ஆளுமைகள் பல உள்ள நிலையில் நான் என்ன சாதிக்க முடியும் என நீங்கள் கேட்கலாம்.  என் குடும்பத்தினரும் கேட்டனர். இதற்கு தொலை நோக்கு பார்வை வேண்டும். 60 ஆண்டுகள் ஒருமுறை தமிழகத்தில் ஒரு சுழற்சி வரும். அதற்கான நேரம் வந்து விட்டது. ரஜினி ரசிகர்கள் என் மீது நம்பிக்கை இருந்தால் வரவேற்போம். மன பேதத்தை உண்டு பண்ணும் எந்த நடவடிக்கையும் செய்ய மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading

தமிழ்நாடு

உடைகிறது அதிமுக கூட்டணி… ‘தனித்துப் போட்டியிட தயார்!’- அறிவித்த தேமுதிக

Published

on

By

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் இணக்கமான போக்கு இல்லை எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் பாஜக மட்டும் தான், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. மற்ற எந்தக் கட்சிகளும் இதுவரை கூட்டணி தொடர்வது குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இன்னும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி சுக்குநூறாக உடையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக எந்தக் கட்சியும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை, தங்களின் முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை. இதனால் பிரச்சனை மேலும் பூதாகரமாகி உள்ளது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘நாம வரப் போற தேர்தல்ல கூட்டணியில போட்டியிடவும் வாய்ப்பிருக்கு. தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பிருக்கு. எதுவா இருந்தாலும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். கேப்டன் மாதிரி ஆட்கள் நம்ப நாட்டுல தோத்துறக் கூடாது’ என்று அதிரடியாக பேசியுள்ளார். இதைச் சுட்டிக்காட்டி, கூட்டணி முறிவு குறித்து தான் விஜய பிரபாகரன் மறைமுகமாக பேசியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக சசிகலா விடுதலை குறித்துப் பேசியிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ‘சசிகலாவின் பங்கும் தமிழக அரசியலில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணாக அவர் பூரண நலம் பெற்று தமிழக அரசியலில் தாக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று சூசகமாக கூறியுள்ளார்.

Continue Reading
சினிமா செய்திகள்22 mins ago

‘சின்னத்திரையில் இருந்து விலகுகிறேன்…’- ராதிகா சரத்குமார் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு39 mins ago

‘நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன்…’- Zoho சிஇஓ ஶ்ரீதர் வேம்பு

செய்திகள்1 hour ago

ரஜினிக்கு டூப்பாக நான் இருக்க மாட்டேன்… கட்சி ஆரம்பிப்பேன்…

சினிமா செய்திகள்1 hour ago

தனது அடுத்த படத்தின் கதையை ஓகே செய்த ரஜினிகாந்த்… கதை இதுதான்…

சினிமா செய்திகள்2 hours ago

‘சூர்யா-40’ படத்தில் ஹீரோயின் ஆன சிவகார்த்திகேயன் பட நாயகி..!

வேலைவாய்ப்பு2 hours ago

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

M.Sc படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு9 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ5 days ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ2 weeks ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ2 weeks ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ2 weeks ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 weeks ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 weeks ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 weeks ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 weeks ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 weeks ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி1 month ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending