Connect with us

தமிழ்நாடு

தொழில் அதிபரை மிரட்டி ₹5 லட்சம் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றம்… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…

Published

on

புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகர் ஆரோக்கிய அம்மாள் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாத்(63) தொழிலதிபர் இவருக்கும் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். லதா ஸ்டீல் ஹவுஸ் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்திவரும் தட்டாஞ்சாவடி வீமன் நகரைச் சேர்ந்த ராஜேஸ்(எ) உதயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ராஜேஸ் தனது நண்பருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மஞ்சுநாத்தை முதலியார்பேட்டை ஜானசம்மந்தம் பகுதியில் ஒருவீட்டிற்கு வரவழைத்து மஞ்சுநாத்தை தாக்கி அவரது செல்போன், கைகடிகாரம், ஆ10 ஆயிரம் பணத்தை பறித்தனர். மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்து தங்களது 2 கணக்கிற்கு தலா 2.50 லட்சம் என 5 லட்சத்தை மஞ்சுநாத் செல்போன் மூலம் மாற்றினர். பின்னர் அவரை அடித்து விரட்டினர். இதையடுத்து அவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு!

Published

on

ஜனவரி 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வந்த பொங்கல் பரிசு, ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருந்ததால் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது தேர்தல் முடிந்து 2-ம் தேதி முடிவுகள் வெளியாகிவிடும். எனவே 9-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவை பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு பேக் செய்யப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

தமிழ்நாடு

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; அரையாண்டு விடுமுறை நீட்டித்து அறிவிப்பு!

Published

on

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே அரசு பள்ளி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாணவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான பள்ளிகள் ஜனவரி 6-ம் தேதிதான் திறக்கும் என்று கூறப்படுகிறது.

Continue Reading

தமிழ்நாடு

ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல; முதல்வர் விளக்கம்!

Published

on

ஜனவரி 16-ம் தேதி, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் வெளியானது.

மாட்டு பொங்கல் அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை. அன்று எப்படி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல், பள்ளியை வைக்கலாம் என்று நேற்று சர்ச்சை எழுந்தது.

அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள், மோடியின் இந்த நிகழ்ச்சியைக் காண விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதை இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்தது மட்டுமல்லாமல், டிவிட்டர் பதிவும் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
கேலரி2 hours ago

சுருதி ஹாசன் – புதிய படங்கள்

சினிமா செய்திகள்2 hours ago

அசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சினிமா செய்திகள்3 hours ago

சென்னை விமான நிலையத்தில் தியேட்டர்!

சினிமா செய்திகள்5 hours ago

‘தமிழ் நடிகர்கள் – தெலுங்கு ஹீரோக்கள்’ டிவிட்டரில் போர்; கடுப்பான சித்தார்த்! (#UnrivalledTamilActors vs #TeluguRealHeroes )

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்21 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (22/01/2020) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்21 hours ago

இன்றைய (22/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய (21/01/2020) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய (21/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

கேலரி2 days ago

கசானா ஜூவல்லரி விளம்பரத்தில் காஜல் அகர்வால்!

Dhanush in Pattas Box Office Collection
சினிமா செய்திகள்2 days ago

தனுஷின் பட்டாஸ் திரைப்படம் வசூல் நிலவரம்!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா6 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா5 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு5 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா6 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்5 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்6 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வணிகம்2 days ago

அல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்!

வைரல் செய்திகள்1 week ago

இப்படியும் காதலர்கள் இருப்பார்களா? வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்2 weeks ago

கேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்

வீடியோ செய்திகள்3 weeks ago

“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்

வீடியோ செய்திகள்3 weeks ago

பஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி

வீடியோ செய்திகள்3 weeks ago

எல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி

வீடியோ செய்திகள்3 weeks ago

ராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி

வீடியோ செய்திகள்3 weeks ago

“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..

வீடியோ செய்திகள்3 weeks ago

2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்

வீடியோ செய்திகள்3 weeks ago

புத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்

Trending