Connect with us

செய்திகள்

போக்கு காட்டிய ரவுடி ’புல்லட் நாகராஜனை’ மடக்கி பிடித்த போலீஸ்!

Published

on

காவல்துறை பெண் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை தேனியில் போலீசார் இன்று கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவரது அண்ணன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறைக்குள் பெண் மருத்துவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து புல்லட் நாகராஜனின் அண்ணனை போலீசார் தாக்கியதால் எஸ்.பி. ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜ் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தார். சிறைக்குள் இருந்து வெளியில் வந்தால் வீடு திரும்ப முடியாது என்று புல்லட் நாகராஜ் மிரட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

தனது அண்ணனைப் போல் தான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், இந்த சம்பவத்திற்கு நீதிப்படியும், வேறுவிதமாகவும் கட்டாயம் தண்டிப்பேன் என்றும் புல்லட் நாகராஜ் மிரட்டினார். எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா-வுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், வாட்ஸ்-அப் ஆடியோவை வெளியிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறை அலுவலர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், புல்லட் நாகராஜ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில், கொலை மிரட்டல், பொது இடத்தில் அருவருப்பான வார்த்தைகளால் பேசி மிரட்டுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் அச்சுறுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த புல்லட் நாகராஜனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தேனியில் கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜிடம் இருந்து, ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுகள், விளையாட்டு துப்பாக்கிகள் மற்றும் நீதிபதி பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் சதம் வீண்: பஞ்சாப் த்ரில் வெற்றி!

Published

on

By

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் கடைசிவரை போட்டியை எடுத்துக் கொண்டு சென்றும் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் அடித்தது. கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் எடுத்தார்கள்.

இதனை அடுத்து 222 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஷத் சிங் வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் சஞ்சு சாம்சன் 4 நான்காவது பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து ஆறாவது பந்தில் அவுட் ஆனதால் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இந்தியா

கொரோனா எதிரொலி.. விமான பயணங்களில் இனி உணவு வழங்கல் கட்..!

Published

on

கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 மணி நேரத்துக்குட்பட்ட விமான பயணங்களின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இப்போது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அடிக்க தொடங்கியுள்ளது.

எனவே பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய அரசு, 2 மணி நேரத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்தின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்துள்ளது. விமான பயணத்தின் போதான இந்த உணவு தடையானது ஏப்ரல் 15, வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சம் நபர்கள் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சர்வதேச விமான பயணம் மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 30 நாடுகளுடன் மட்டும் போடப்பட்டுள்ள ஏர் பபுள் ஒப்பந்தத்தின் படி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச விமான பயணங்களில் போது தொடர்ந்து உணவு வழங்கப்படும்.

Continue Reading

இந்தியா

‘மம்தாவின் ஆட்டம் க்ளோஸ்…’- சொடுக்குப் போட்டு சவால்விட்ட மோடி

Published

on

By

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது.

இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்க மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது.

மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார். திரிணாமுல் கட்சியினர் தலித்களை பிச்சைக்காரர்கள் என கொச்சைப்படுகின்றனர். மம்தாவுக்கு தெரியாமல் அவரது கட்சியினர் இதுபோன்று பேச முடியாது.

மம்தா அவர்களே, உங்கள் கோபத்தை யார் மீதாவது காட்ட விரும்பினால், நான் இங்கே இருக்கிறேன். உங்களது முழு கோபத்தையும் என் மீது காட்டுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். மம்தா பானர்ஜியின் ஏதேச்சதிகாரத்தை வங்க மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Continue Reading
கிரிக்கெட்42 mins ago

சஞ்சு சாம்சன் சதம் வீண்: பஞ்சாப் த்ரில் வெற்றி!

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்3 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (13/04/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்4 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/04/2021)

வணிகம்8 hours ago

உஷார்.. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த நகரங்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை!

வணிகம்8 hours ago

டிசிஎஸ் நிகர லாபம் 14.8% அதிகரிப்பு.. வருவாய் 43,705 கோடியாக அதிகரிப்பு!

வேலைவாய்ப்பு8 hours ago

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு!

வணிகம்9 hours ago

முக்கிய அறிவிப்பு.. 14 மணி நேரத்துக்கு RTGS சேவை வேலை செய்யாது!

இந்தியா10 hours ago

கொரோனா எதிரொலி.. விமான பயணங்களில் இனி உணவு வழங்கல் கட்..!

இந்தியா10 hours ago

‘மம்தாவின் ஆட்டம் க்ளோஸ்…’- சொடுக்குப் போட்டு சவால்விட்ட மோடி

தமிழ்நாடு11 hours ago

புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா2 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ3 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்3 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending