உலகம்
நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் சுஷ்மா!


நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘பனாமா கேட்’ ஊழல் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்,மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:, நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் குல்சூம் ஆத்மா சாந்தியடைய எஇறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம்
ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த புயல்… ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!


சக்தி வாய்ந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம், வீடுகள் என எந்தவொர் அடிப்படை வசதிகளும் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செரோஜா என்னும் புயல் ஆஸ்திரேலியாவை கடுமையாகத் தாக்கி உள்ளது. 170 கி.மீ வேகத்தில் இந்த செரோஜா புயல் ஆஸ்திரேலியாவைத் தாக்கியதில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்துள்ளன. குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா மிகக் கடுமையான சேதாரங்களைச் சந்தித்து உள்ளதாக ஆஸ்ஹிரேலியா பிரதமர் ஸ்கார் மோரிசன் அறிவித்துள்ளார்.
புயல் தாக்குதலுக்கான முக்கியக் காரணமாகவே காலநிலை மாற்றம் தான் என சுற்றுச்சூழலியளார்கள் தெரிவிக்கின்றனர். இன்று தான் புயலின் வேகமும் மழையின் தாக்கமும் சற்று தணிந்திருப்பதால் பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதரங்களின் முழு நிலை இதுவரையில் தெரியாததால் மீட்புப் படையினர் துரிதப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நூற்றாண்டில் காண முடியாத பயங்கரமான புயல் ஆக சரோஜா புயல் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து இதுபோன வலிமையான புயல்களின் தாக்கம் இருக்கும் என்றும் சர்வதேச அளவில் சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம்
1 பில்லியன் நஷ்ட ஈடு தராவிட்டால் எவர்க்ரீன் கப்பலை விடமாட்டோம்: எகிப்து அதிகாரிகள் பிடிவாதம்!


சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்டதை அடுத்து இரண்டு பக்கமும் கப்பல்கள் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்து இருந்தன என்பது தெரிந்ததே. இதனால் உலக பொருளாதாரமே சிக்கல் ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து நெதர்லாந்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஒரு வாரம் போராட்டத்திற்கு பின்னர் அந்த கப்பல் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியது காரணமாக சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும். இதனை அடுத்து ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என எவர்கிரீன் கப்பலின் நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து எவர்க்ரீன் கப்பலை எகிப்து அதிகாரிகள் பிடித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை எவர்கிரீன் கப்பல் நிர்வாகம் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம்
வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகன்: காரணம் கூகுள் மேப்


கூகுள் மேப் வழிகாட்டுதல் மூலம் திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகன் வேறொரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அவர் திருமணம் நடைபெற இருக்கும் மண்டபத்திற்கு செல்வதற்காக கூகுள் மேப் மூலம் வழியை பார்த்து கொண்டு அதன் மூலம் அவர் காரில் சென்று கொண்டிருந்தார்., அப்போது ஒரு மண்டபத்தை கூகுள் மேப் காட்டியது. உடனடியாக அவர் இறங்கி மண்டபத்தின் உள்ளே சென்றபோது அங்கு வேறொரு மணமகள் மண மேடையில் உட்கார்ந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூகுள் மேப் பெரும்பாலும் சரியான வழியை தேடி கொடுத்தாலும் ஒரு சில முறை இது போன்ற தவறான பாதையை காட்டுவதால் குழப்பம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு18 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
கிரிக்கெட்2 days ago
ஷிகர் தவான் அபார ஆட்டம்: சென்னை அணி தோல்வி!