பிற விளையாட்டுகள்
கால்பந்து விளையாட்டின் கடவுள் மரடோனா காலமானார்!


கிரெக்கெட் உலகின் கடவுள் சச்சின் எப்படியோ, அப்படி கால்பந்து விளையாட்டின் கடவுளாகப் பார்க்கப்பட்டவர் அர்ஜெண்டினா வீரர் டியாகோ மரடோனா.
60 வயதான மரடோனாவுக்கு மூலையில் ஏற்பட்ட இரத்த உரைவை அடுத்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மரடோனா, மருத்துவர்களின் பார்வையில் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பால் உலக கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
டியாகோ மரடோனாவுக் இறுதி அஞ்சலில் செலுத்த, அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
பிற விளையாட்டுகள்
இன்ஸ்டாகிராமில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்த கால்பந்து வீரர்!


போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம்ல் அதிக ஃபாலோயர்கள் பெற்றவர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார்.
கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் ரொனால்டோ, தற்போது உலகில் பிரபலமான மனிதர் என்ற இன்னொரு மணிமகுடத்தை பெற்றுள்ளார். உலக அளவில் சுமார் 240 மில்லியன் மக்கள் இவரை இன்ஸ்டாகிரமில் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமை தவிர்த்து ஃபேஸ்புக், டிவிட்டர் தளத்திலும் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நபராக வலம் வருகிறார். இவரை அடுத்து பாப் இசையின் ராக் ஸ்டாரான அரியானா கிராண்டே 214 மில்லியன் ஃபாலோயர்களும், ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (தி ராக்) 209 மில்லியன் ஃபாலோயர்களும் பெற்றுள்ளனர்.
ரொனால்டோவின் போட்டி ஆட்டக்காரரான மெஸ்ஸி 174 மில்லியன் ஃபாலோயர்களும் பெற்றுள்ளார். சமூகவலைதளங்களில் சிங்கமாக இருக்கும் ரொனால்டோ இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலமாக 47.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த 2020இல் ஈட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாவில் ரொனால்டோவை தவிர்த்து அதிக ஃபாலோயர்களை கொண்டிருப்பது அந்த தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் மட்டுமே.
பிற விளையாட்டுகள்
ஒலிம்பிக்ஸ் 2024-ல் இணைக்கப்பட்ட ப்ரேக் டான்ஸ்..!


வருகிற 2024-ம் ஆண்டு முதல் புதிதாக நான்கு விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
வருகிற 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸில் புதிதாக ப்ரேக் டான்ஸிங் நடனப் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. கடல் சறுக்கு, ஏற்றம் ஏறுதல், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளும் புதிதாக ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளைப் புதுப்பிக்கவும் நன்கொடையாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் விதமாகவும் புதிதாக இந்த நான்கு போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ப்ரேக் டான்ஸிங் அறிமுகப்படுத்தப்படுவதற்கு நடனத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்த ப்ரேக் டான்ஸிங் நடன முறை அறிமுகமானது.
ஹிப் ஹாப் கலாச்சாரத்தின் ஒரு வகை நடன முறையே ப்ரேக் டான்ஸிங் ஆகும். தற்போது இந்த நடன முறை அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி உள்ளதால் இந்த நடன முறையை ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிற விளையாட்டுகள்
தன் மீது கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என குறிப்பிட்டேன்.. பிவி சிந்து விளக்கம்!


சர்வதேச பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை, தன் மீதான கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என்று குறிப்பிட்டேன் என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம், டென்மார்க்கில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்கவில்லை.
அது குறித்து இன்று பி.வி.சிந்து வெளியிட்ட செய்தியில், கோவிட்-19 காரணமாக டென்மார்க் பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.
இவரது இந்த டிவிட்டர் பதிவால், பி.வி.சிந்து பேட்மிட்டன் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் என்று செய்திகள் பரவின.
தற்போது அவரது டிவிட்டர் பதிவுக்கு விளக்கம் அளித்த பி.வி.சிந்து, கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என்று குறிப்பிட்டேன். சர்வதேச பேட்மிட்டன் போட்டியிலிருந்து நான் விலகவில்லை.
அடுத்து வர இருக்கும் ஆசிய பேட்மிட்டன் போட்டியில் கண்டிப்பாக நான் விளையாடுவேன் என்று பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்று, கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆரோக்கியம்2 days ago
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?
-
விமர்சனம்2 days ago
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!
-
ஆரோக்கியம்2 days ago
திராட்சையில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே?
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/01/2021)