கிரிக்கெட்
பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!


நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி வங்கதேசம், இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது.
104 ரன்னில் ரோஹித் ஷர்மா முதலில் வெளியேற சிறிது இடைவெளியில் கே.எல்.ராகுல் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 26 ரன்னும் ரிஷப் பண்ட் 48 ரன்னும் சேர்த்தனர். அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போனது. தோனி 35 ரன்னில் வெளியேற பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் முஸ்தஃபிர் ரஹ்மான் 5 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 39 ரன்னில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து சீரான இடைவெளியில் வங்கதேச விக்கட்டுகள் விழுந்தாலும், அவர்கள் ரன் குவிக்கவும் தவறவில்லை. இதனால் வங்கதேச அணியின் ரன் ரேட் குறையாமல் சீராக வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டில் தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பினாலும் வங்கதேச அணி வீரர்கள் விடாமல் போராடினர். இதனால் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்திவிடுமே என்ற அச்சம் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டு தான் இருந்தது. குறிப்பாக முகமது சைஃபுதின் 38 பந்துகளில் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டம் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் விதமாக இருந்தது. ஆனால் அதற்குள் இந்திய அணி வீரர்கள் அனைத்து விக்கெட்டுகளையும்வீழ்த்தினர்.
48 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 66 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நேற்று அடித்த சதத்துடன் இந்த உலகக் கோப்பை தொடரில் தனது நான்காவது சதத்தைப் பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
கிரிக்கெட்
ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகலா? அதிர்ச்சி தகவல்


ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பேரர்ச்சியாக உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வருகிறார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில் திடீரென அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயம் பெரிதாக இருப்பதாகவும் ஒரு வாரம் அவர் எழுந்து நிற்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சேர்ந்த ஐதராபாத் அணியின் அதிகாரி ஒருவர் கூறியபோது நடராஜன் காயம் குறித்து அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை என்றும் அந்த அறிக்கை வந்தவுடன் அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐயிடம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இதுகுறித்து கூறிய போது நடராஜனை நாங்கல் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்றும், ஆனால் துரதிஸ்டவசமாக அவரது காயம் அதிகம் இருப்பதால் அவர் அணியில் இணைவது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட்
10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு: படிக்கல் அபார சதம்


நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிக அபாரமாக விளையாடிய படிக்கல் சதமடித்து அசத்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதன்பின் 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோஹ்லி மற்றும் படிக்கல் ஆகிய இருவருமே ஆட்டத்தை முடித்து விட்டனர். விராட் கோலி 72 ரன்கள் அடித்தார், படிக்கல் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனையடுத்து படிக்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
IPL- ராஜஸ்தானுடன் டாஸ் போட்ட போது கோலி செய்த காரியத்தைப் பாருங்க!


ஐபிஎல் தொடரில் இன்று 16 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடக்கிறது. ஆர்.சி.பி அணி கோலி தலைமையில் இன்று களமிறங்கியுள்ளது. இளம் கேப்டனான சஞ்ச சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் கண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸின் போது இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்தின் நடுவில் வந்தனர். அப்போது சாம்சன் டாஸ் தோற்றுவிட்டார். ஆனால் தான் டாஸ் வென்றதைக் கூட அறியாத விராட் கோலி, சற்று தள்ளி நின்றார்.
இதனால் ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கோலியை அழைத்து நீங்கள் தான் டாஸ் வென்றுள்ளீர்களர் என்றனர். அதற்கு அவர், ‘மன்னிக்கவும்… நான் டாஸ் வென்று பழக்கம் இல்லை’ என்று கூறி சிரித்தார்.
“I’m not used to winning tosses” 😅 @imVkohli #RCB have the toss and they will bowl first against #RR #VIVOIPL pic.twitter.com/a0bX6JNGak
— IndianPremierLeague (@IPL) April 22, 2021
கோலி இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளிலும் இந்தியாவுக்குத் தலைமை தாங்கிய போதும் மிக அரிதாகவே டாஸ் வெல்வார். இதனால் தான் அவர் அப்படியான ஒரு கருத்தைக் கூறினார். இந்நிலையில் இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரைப் பொறுத்த வரையில், ஆர்.சி.பி நல்ல ஃபார்மில் உள்ளது. அதே நேரத்தில் ராயல்ஸ் வெற்றிக்காக திணறி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?