விளையாட்டு
அணியில் இடம் தரமாட்டீங்கல… புதிய அவதாரம் எடுத்த தினேஷ் கார்த்திக்!


தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தனது திறனை வெளிப்படுத்தி வந்த போதும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் ஆன தினேஷ் கார்த்திக் புதிதாக வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றுள்ளது. அடுத்ததாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்தியா- இங்கிலாந்து மோதும் டி20, ஒரு நாள் போட்டி தொடர்களை ஒளிபரப்பும் உரிமையை ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவி சேனல் வாங்கியுள்ளது. இந்தப் போட்டிகளுக்குத் தான் தற்போது வர்ணனை செய்ய உள்ளார் தினேஷ் கார்த்திக். தற்போது தமிழக அணி கேப்டனாக இருந்து சமீபத்தில் தான் சையது அலி கோப்பையை தமிழக அணிக்காக வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒரே இந்தியர் ஆக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். மற்றபடி இந்தப் பட்டியலில் டேவிட் லாய்ட், நாசர் ஹுசைன், இயன் வார்ட், எபோனி ரெய்ன்போர்டு, மைக்கேல் அதர்டன், ராப் கீ மற்றும் ஸ்டுவார்ட் ப்ரோட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்


அகமதாபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனை அடுத்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 25 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் இந்தியாவின் அக்ஷர் பட்டேல் மிக அருமையாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று நடைபெற்று வரும் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதும், நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் எண்ட் என்றும் மைதானத்தின் மற்றொரு முனை அதானி எண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்


இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணிக்காக பவுலிங்கில் பல்வேறு சாதனைகளை இஷாந்த் சர்மா புரிந்துள்ளார். அப்படிப்பட்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி டெஸ்டின் போது நடந்த சம்பவம் பற்றி ரகசியம் உடைத்துப் பேசியுள்ளார்.
2014-15 ஆம் ஆண்டில் இந்திய இணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதுவே தோனியின் கடைசி டெஸ்ட் தொடராக அமைந்தது.
‘தோனியின் கடைசி டெஸ்டின் போது மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பல ஊசிகள் என் உடலில் செலுத்தப்பட்டது. அப்போது பாதி டெஸ்டில் என்னால் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது.
அது பற்றி நான் கேப்டனாக இருந்த தோனியிடம் கூறினேன். அவரும் அதற்கு, பரவாயில்லை இனி நீ பந்து வீசத் தேவையில்லை. என் கடைசி டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே நீ விலகிவிட்டாய் என்று தெரிவித்தார். எனக்கு அப்போது என்ன சொல்கிறார் எனப் புரியவில்லை.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தன் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அறிவித்தார் தோனி. அப்போது தான், எனக்கு அவர் என்ன சொன்னார் எனப் புரிந்தது. உண்மையில் அது தோனியின் கடைசி டெஸ்ட் எனத் தெரிந்திருந்தால், கண்டிப்பாக தொடர்ந்து பந்து வீசியிருப்பேன்’ என்று உருக்கத்துடன் கூறியுள்ளார் இஷாந்த் சர்மா.
கிரிக்கெட்
‘ஏன்டா நீ ஆஸி., கேப்டன்டா… இப்டியா பேசுறது’- ஆரோன் பின்சை வறுத்தெடுத்த மைக்கெல் கிளார்க்


ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பின்ச். அவரை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்ச் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்ச்சின் கருத்துக்கு அவரை சாடியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க்.
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சென்ற வாரம் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில் எடுத்துள்ளது.
ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப் பட்டியல் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதில் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லை எடுக்க ஐபிஎல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அவரை ரூ.14 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் ராய், ஆஸ்திரேலிய வீரர்கள் அலெக்ஸ் கெரே, ஆரோன் பின்ச், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இலங்கை வீரர் குஷால் பெரேரா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை. இந்த வீரர்கள் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
ஐபிஎல் அணிகளின் இந்த முடிவு குறித்து பின்ச் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் பங்கெடுத்திருந்தால் அது மிகச் சிறப்பானதாக இருந்திருக்கும். அது ஒரு பிராமதமான தொடர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நான் இந்த முறை எந்த அணியாலும் எடுக்கப்பட மாட்டேன் என்பதை எதிர்பார்த்தே இருந்தேன். தற்போதைக்கு குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என்பது அவ்வளவு மோசமான விஷயமாக இருக்காது’ என்று கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துப் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதே நேரத்தில் பின்ச்சின் பேச்சால் கொதிப்படைந்த கிளார்க், ‘இப்படியான ஒரு கருத்தை பின்ச் தெரிவித்துள்ளார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. பின்ச் தான் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருக்கும் நபர். அப்படியென்றால் அனைத்து அணிகளும் அவர் வேண்டும் என்று தான் நினைத்திருக்க வேண்டும். அப்படியான எண்ணத்தில் தான் அவரும் இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து, எந்த அணியும் எடுக்காது என்று எனக்கே தெரியும். அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்று பேசுவது பொறுப்பான பதில் அல்ல. இது அவரின் நம்பிக்கையற்ற மனநிலையைப் பிரதிபலிக்கிறது’ என விமர்சித்துள்ளார்.
-
சினிமா செய்திகள்2 days ago
’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குகிறாரா? அப்ப ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?
-
கிரிக்கெட்2 days ago
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருக்கலாம்? ஏன்?
-
தினபலன்2 days ago
உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (23/02/2021)
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலைவாய்ப்பு!