கிரிக்கெட்
ஆண்டர்சன் பந்தை ரிவர்ஸ்-ஸ்கூப் செய்து மிரளவைத்த பன்ட்- ‘எப்டி அவரால மட்டும்’ என குவியும் பாராட்டுகள்


இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், அடித்த சதம் தான் திருப்புமுனையாக அமைந்தது. அவர் அடித்த சதத்திற்காகவே ஆட்ட நாயகன் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
பன்ட், ஒரு கட்டம் வரை நிதானமாக ஆடினார். ஆனால், அரைசதம் தாண்டிய பின்னர் அசுரபலம் கொண்டு ஷாட்களை ஆடி, பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். அதில் அவர் அடித்த ஒரு பவுண்டரி, இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜிம்மி ஆண்டர்சன் பன்டுக்குப் பந்து வீச, அதை ரிவர்ஸ் ஸ்கூப் முறையில் பவுண்டரிக்கு அனுப்பினார். இந்த அசாத்திய ஷாட் குறித்து முன்னாள், இன்னாள் வீரர்கள் வியந்து கருத்திட்டு வருகிறார்கள்.
பன்ட் அடித்த ஷாட்:
I don’t think anyone has had the skill audacity to do that to Jimmy Anderson (in a Test) before #INDvENG #astonishing pic.twitter.com/T3snjDstW5
— simon hughes (@theanalyst) March 5, 2021
அதற்கான ரியாக்ஷன்ஸ்:
Me Watching Rishabh Pant reverse sweep Anderson for a boundary and then bring up his century with a SIX.
That’s my Boy! #INDvENG pic.twitter.com/yunVL1GRTQ— Virender Sehwag (@virendersehwag) March 5, 2021
Shot Of 2021…..that reverse sweep vs James Anderson with the second new ball. Audacious. Adventurous. Rishabh Pant is an absolute freak. Love his play to bits. #IndvEng
— Aakash Chopra (@cricketaakash) March 5, 2021
NO YOU CANNOT DO THAT RISHABH PANT!!! 🤯 #INDvENG https://t.co/DiRX7IMXyv
— Wasim Jaffer (@WasimJaffer14) March 5, 2021
கிரிக்கெட்
டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங்: தொடர் வெற்றி பெறுவாரா கோஹ்லி?


இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது
இன்று ஐபிஎல் போட்டியின் பத்தாவது போட்டியின் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்
இதனை அடுத்து சற்று முன்னர் களமிறங்கிய படிக்கல் மற்றும் விராத் கோலி அதிரடியாக விளையாடி வருகின்றனர். முதல் ஓவரிலேயே அந்த அணி 6 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றும் தொடர் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கொல்கத்தா: ரானா, கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், ஷகிப் அல் ஹூசைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரஸல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன்சிங், பிரதிஷ் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ரஜத் படிதார், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சாஹல்,
கிரிக்கெட்
நேற்றைய போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாதது ஏன்? விவிஎஸ் லட்சுமண் விளக்கம்!


நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய அந்த ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்கள் வரை ஆட்டத்தை தனது பக்கமே வைத்திருந்தது. ஆனால் அதன் பின் திடீரென ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் களமிறக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து ஐதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
கிரிக்கெட்
கடைசி நேரத்தில் சொதப்பிய ஐதராபாத்: மும்பை அபார வெற்றி


நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.
நேற்று டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் குவின்டன் டி காக் 40 ரன்களும், பொல்லார்டு 35 ரன்களும் ரோகித் சர்மா 32 ரன்களும் எடுத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் அதன்பின் மடமடவென விக்கெட்டுகள் விழுந்தன. இதனை அடுத்து இறுதியில் 137 ரன்களுக்கு ஐதராபாத் அணி ஆட்டம் இழந்ததால், மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இதனை அடுத்து மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் பெங்களூர் அணி 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் சென்னை அணி 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!
-
சினிமா செய்திகள்2 days ago
விவேக் உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா..?