கிரிக்கெட்
‘சின்ன பசங்கதான்… ஆனா, தெறிக்க விட்டுட்டாங்க!’- இந்திய அணியை புகழ்ந்து தள்ளும் சோயப் அக்தர்


இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா மதிக்கத்தக்க ஸ்கோரான 336ஐ அடைந்தது. தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா, 250 ரன்களைக் கூட தாண்டாது என்று அஞ்சப்பட்ட நிலையில் இப்படியான அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் லோவர் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ஷ்ராதுல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அசத்தல் அரைசதங்கள்தான். இந்திய அணியின் பேட்டிங்கையும், அணியின் போர்க் குணத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இன்றைய ஆட்டத்தை 2 விக்கெட்டுகள் இழந்து 62 ரன்களுடன் ஆரம்பித்தது. 3வது நாள் ஆட்டத்தை செத்தேஷ்வர் புஜாராவும், அஜிங்கியே ரஹானேவும் மீண்டும் ஆரம்பித்தனர். இருவரும் முறையே 25 மற்றும் 37 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த மயான்க் அகர்வாலும் 38 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், அதிரடியாக விளையாடினாலும் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களத்துக்கு வந்த வாஷிங்டன் சுந்தர், நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். அவருடன் ஷ்ராதுல் தாக்கூரும் ஈடு கொடுத்தார். ஒரு கட்டத்தில் தாக்கூர் மளமளவென ரன் குவித்து, அரைசதம் எட்டினார். அவர் 67 ரன்களுக்கு அவுட்டாக சுந்தர், தொடர்ந்து களத்தில் இருந்தார். அவர் கடைசியாக 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இந்திய இன்னிங்ஸும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. 336 ரன்களோடு தனது முதல் இன்னிங்ஸை இந்தியா முடித்துக் கொண்டது.
வெறும் 33 ரன்கள் லீடிங் உடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. அந்த அணி ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் விளையாடி வருகிறது.
இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே ஆட்டம் பாக்கியிருப்பதால், இந்தப் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி, தனது மூத்த மற்றும் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது. குறிப்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா என முக்கிய வீரர்கள் இல்லாமல் களம் கண்டது. இந்தப் போட்டியில் மட்டும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அறிமுகம் ஆயினர். இந்த ஆஸ்திரேலிய தொடரில்தான் பவுலர் முகமது சிராஜும் அறிமுகம் ஆனார். இப்படி அனுபவமற்ற அணியை வைத்துக் கொண்டு இந்தியா, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று, மூன்றாவது போட்டியை டிரா செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த போராட்ட குணத்தைக் கண்டு வியந்து பேசியுள்ள அக்தர், ‘பல வீரர்களை காயத்தால் இழந்த பின்னரும், குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்திய அணி பிராமாதமாக ஆடி வருகிறது. இதுதான் இந்தியாவின் அழகே.
இந்த இளம் அணி, முழு பலம் கொண்ட ஆஸ்திரேலிய அணியை சமாளித்து ஆடுவது மிகவும் ஆச்சரியம் அளிக்கின்றது. ஆஸ்திரேலிய அணியை முழு முயற்சி கொண்டு எதிர் கொள்வது என்று இந்தியா முடிவு செய்துவிட்டது. இந்த அணியின் கேரக்டரைப் பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டேன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
3வது டெஸ்டின் மூன்றாவது நாள் ஹைலைட்ஸ்:
கிரிக்கெட்
INDvENG – “எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்!”- சர்ச்சையைக் கிளப்பும் ஜாக் கிராலி


இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, அதிகபட்சமாக அரைசதம் விளாசினார். இந்தியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா அரசைதம் விளாசி தொடர்ந்து களத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் வகையில் மூன்றாவது அம்பயர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜாக் கிராலி.
இந்திய அணி பேட்டிங் செய்த போது, ரோகித் சர்மாவை ஸ்டம்பிங் செய்து அப்பீல் செய்தது இங்கிலாந்து. அது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மூன்றாவது அம்பயரிடம் சென்றது. அவர் ஒரு சில ஆங்கில்களில் இருந்து மட்டும் ஸ்டம்பிங்கை பார்த்து விட்டு, நாட்-அவுட் கொடுத்து விட்டார். இது சரியில்லை என்பது தான் இங்கிலாந்து அணியின் வாதம்.
இது பற்றி ஜாக் கிராலி, ‘இப்படியான முடிவுகள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. நாங்கள் ஆட்டத்தில் தற்போது பின் தங்கியுள்ளோம். இதைப் போன்ற சமயங்களில் சில முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக மாற வேண்டும் என்று கருதுகிறோம். நான் ஸ்டம்பிங்கில் அவுட், நாட்-அவுட் என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. ஏன் இந்திய அணிக்கான அப்பீல் மட்டும் பல ஆங்கில்களில் இருந்து பார்க்கப்படவில்லை. அது தான் எனது கேள்வி’ என்று கேட்டுள்ளார். இது மிகப் பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.
காரணம், இந்தப் போட்டியில் மைதானத்தில் இருக்கும் நடுவர்களும், மூன்றாவது அம்பயரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இந்தியர்களுக்கும் இந்திய அணிக்கும் சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தான் சர்ச்சையாகி உள்ளது.
கிரிக்கெட்
#INDvsENG | பந்தின் மீது எச்சில் தடவிய ஸ்டோக்ஸ்.. எச்சரித்த நடுவர்!


இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பந்தின் மீது பென் ஸ்டோக்ஸ் எச்சில் தடவியதைப் பார்த்த நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பொதுவாக கிரிக்கெட்டில் பந்து வீசும் போது, நன்கு சுழன்று செல்ல வேண்டும் என்பதற்காக அதை ஈரம் ஆக்க எச்சில் தடவ அனுமதிப்பார்கள். ஆனால் இது கொரோனா காலம் என்பதால் இவ்வாறு பந்தின் மீது எச்சில் தடவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நேற்று இந்திய அணியின் முதல் இன்னிக்ஸ் பேட்டிங்கின் 12வது ஓவரை வீசிய பென் ஸ்டோக், பந்தின் மீது எச்சில் தடவினார். இதை கண்ட நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Cricket in the #COVID19 era! Umpire sanitising the ball after Ben Stokes used saliva. The next time someone does so, the batting team gets five runs.#INDvsENG pic.twitter.com/cuwPxPoxK8
— Samanway Banerjee (@qriosam) February 24, 2021
பென் ஸ்டோக்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல் பந்தின் மீது சானிடைசர் போட்டு துடைத்தனர்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எச்சில் துப்பியதற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இந்த தவறு நேர்ந்தால், இங்கிலாந்து அணியின் 5 ரன்கள் அபராதமாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்தது. அடுத்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா 57 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் ஆட்டாம் இழக்காமல் ஆடி வருகின்றனர்.
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்


அகமதாபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனை அடுத்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 25 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் இந்தியாவின் அக்ஷர் பட்டேல் மிக அருமையாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று நடைபெற்று வரும் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதும், நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் எண்ட் என்றும் மைதானத்தின் மற்றொரு முனை அதானி எண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!