கிரிக்கெட்
சென்னை டெஸ்ட்: ரோஹித் சர்மா அபார சதம்!


இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
இதனை அடுத்து ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிலையில் 2-வது ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் கில் விக்கெட்டை இழந்ததார். அதேபோல் கேப்டன் விராத் கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
கிரிக்கெட்
#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே!


2021 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக காட்டியை அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் சென்னை அணி காட்டியுள்ளது. பேட்டிங்கில் பலமாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கட்டுப்படுத்த சென்னை அணி 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை 220 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் 42 பந்துகளுக்கு 64 ரன்கள் அடித்தார். டு பிளசிஸ் 60 பந்துகளுக்கு 95 ரன்க்அள் எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார். 3வதாக பேட்டிங் செய்ய வந்த மோயின் அலி 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இருந்த போது அவுட்டானார். தொடர்ந்து வந்த தல தோனி 8 பந்துகளுக்கு 17 ரன்கள் அடித்து இருந்த போது ருசேல் பந்தில் மார்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா ஒரு பந்தை மட்டும் சந்தித்து சிக்ஸ் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. சுபம் கில் சாஹர் பந்தில் லுங்கியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். நிதிஷ் ரானா 12 பந்துகளுக்கு 9 ரன்கள் அடித்து இருந்த போது சாஹர் வீசிய பந்தில் தோனியிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்படி தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்கள் தொடர்ந்து சரிய, 6வது ஆக வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து இருக்கும் போது லிங்கி பந்தில் lbw அவுட்டானார்,. அடுத்து விளையாடிய ருசேல், கும்மிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தனர். ருசேல் 22 பந்துகளில் 54 ரன்கள் அடித்து இருக்கும் போது சாம் பந்தில் போல்ட் ஆனார். அடுத்து கும்மின்ஸ் உடன் ஜோடி சேர்ந்த 3 பவுலர்களும் டக் அவுட் ஆக, கும்மின்ஸ் மட்டும் 34 பந்துகளுக்கு 66 ரன்களை சேர்த்து இருந்தார். 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றுப்போனது. சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 4 ஓவர்களுக்கு 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெடளையும் எடுத்தார்.
சென்ற ஐபிஎல் தொடரில் சோபிக்காத சென்னை அணி இந்த முறை முதல் போட்டியை தவிர அடுத்த 3 போட்டிகளிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.
கிரிக்கெட்
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!


இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்கள் குவித்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் 221 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா அணி சிஎஸ்கேவின் அபார பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தீபக் சஹர் முக்கிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கில், ரானா, மோர்கன், சுனில் நரைன் ஆகிய 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றால் முதல் இடத்தைப் பெறுவது மட்டுமன்றி நல்ல ரன்ரேட்டையும் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
ஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி!


இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆகிய இருவரும் களமிறங்கிய நிலையில் இருவரும் இணைந்து 115 ரன்கள் குவித்தனர். ருத்ராஜ் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் மொயின் 25 ரன்களும் கேப்டன் தோனி 17 ரன்களும் எடுத்திருந்த நிலையில் கடைசி வரை அவுட் ஆகாமல் டூபிளஸ்சிஸ் 95 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
221 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன், நிகிடி ஆகியோர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
மொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே!!
-
வணிகம்2 days ago
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!
-
சினிமா செய்திகள்2 days ago
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!