கிரிக்கெட்
INDvENG- சதம் விளாசிய பன்ட்; அரைசதம் அடித்துப் போராடும் சுந்தர்- இந்தியாவின் மாஸ் கம்-பேக்!!!


இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
1⃣0⃣0⃣-run stand! 👌👌@RishabhPant17 & @Sundarwashi5 complete a century partnership as #TeamIndia move closer to 250. 👍👍@Paytm #INDvENG
Follow the match 👉 https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/YF3aDRRcbG
— BCCI (@BCCI) March 5, 2021
இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட இந்தியா 85 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்தியா சார்பில் ரிஷப் பன்ட் சதம் விளாசி அசத்தினார். அவருக்குப் பக்க பலமாக இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி தொடர்ந்து விளையாடி வருகிறார். பன்ட், 118 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அவுட்டானார்.
5⃣0⃣! 👍👍@Sundarwashi5 brings up his 3⃣rd Test half-century. 👏👏#TeamIndia‘s lead moves past 70. @Paytm #INDvENG
Follow the match 👉 https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/j62fSXEEGX
— BCCI (@BCCI) March 5, 2021
ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுப்பதற்கு முன்னரே இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. ஆனால் பன்ட் மற்றும் சுந்தரின் ஜோடி இந்தியாவின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதன் மூலம் தற்போது இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது.
கிரிக்கெட்
IPL- ராஜஸ்தானுடன் டாஸ் போட்ட போது கோலி செய்த காரியத்தைப் பாருங்க!


ஐபிஎல் தொடரில் இன்று 16 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடக்கிறது. ஆர்.சி.பி அணி கோலி தலைமையில் இன்று களமிறங்கியுள்ளது. இளம் கேப்டனான சஞ்ச சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் கண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸின் போது இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்தின் நடுவில் வந்தனர். அப்போது சாம்சன் டாஸ் தோற்றுவிட்டார். ஆனால் தான் டாஸ் வென்றதைக் கூட அறியாத விராட் கோலி, சற்று தள்ளி நின்றார்.
இதனால் ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கோலியை அழைத்து நீங்கள் தான் டாஸ் வென்றுள்ளீர்களர் என்றனர். அதற்கு அவர், ‘மன்னிக்கவும்… நான் டாஸ் வென்று பழக்கம் இல்லை’ என்று கூறி சிரித்தார்.
“I’m not used to winning tosses” 😅 @imVkohli #RCB have the toss and they will bowl first against #RR #VIVOIPL pic.twitter.com/a0bX6JNGak
— IndianPremierLeague (@IPL) April 22, 2021
கோலி இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளிலும் இந்தியாவுக்குத் தலைமை தாங்கிய போதும் மிக அரிதாகவே டாஸ் வெல்வார். இதனால் தான் அவர் அப்படியான ஒரு கருத்தைக் கூறினார். இந்நிலையில் இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரைப் பொறுத்த வரையில், ஆர்.சி.பி நல்ல ஃபார்மில் உள்ளது. அதே நேரத்தில் ராயல்ஸ் வெற்றிக்காக திணறி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.
கிரிக்கெட்
டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங் செய்ய தயாராகும் ராஜஸ்தான்!


இன்று நடைபெற உள்ள ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சற்றுமுன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி டாஸ் வென்ற நிலையில் அவர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வென்றால் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ராஜஸ்தான் அணி வென்றால் 4 புள்ளிகளுடன் குறைந்த பட்சம் 5-வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, ஜேமிசன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், ரிச்சர்ட்சன், சிராஜ், சாஹல்,
ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, ஸ்ரேயா கோபால், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்
கிரிக்கெட்
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!


நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 220 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் 221 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி முதல் 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்துவிட்டது. ஆனால் அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸல் அதிரடியாக விளையாடினார்கள். அதன் பின்னர் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
கிரிக்கெட்2 days ago
கடைசி ஓவர் வரை போராடிய மும்பை: டெல்லி அணி த்ரில் வெற்றி!
-
சினிமா செய்திகள்1 day ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/04/2021)